[:en]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:de]எனது ஆன்மிகம் – 30 ஆர்.கே.[:]

[:en]

போதிபாலா

அடுத்ததாக நான் உங்களுக்கு சொல்லப் போகும் நபர் போதிபாலா. இவர் ஒரு புத்த பிக்கு. புத்தரின் கருத்துகளை மிக அழகாக, தெளிவாக கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறக் கூடியவர். இவரை குறித்து மதுரையில் எனது நண்பர்கள் சிலர் சொல்லியதன் அடிப்படையில் சரி சென்று சந்திக்கலாமே என்று அவரின் அனுமதி பெற்று சந்திக்கச் சென்றேன்.

மதுரை பிஎப் ஆபீஸ் குவாட்டஸில் அப்போது அவர் குடியிருந்து வந்தார். அவர் மதுரை காந்தி மியூசியத்தில் புத்தரின் கருத்துக்களை, அவரின் வழிமுறைகளை சொல்லி வந்தார். அக்கூட்டங்களில் பங்கேற்கும் நண்பர்கள் சொல்லித்தான் அவரை நான் பார்க்க சென்றிருந்தேன்.

அது ஒரு சிறிய அறை. அவர் மட்டுமே தங்கியிருந்தார். என்னை வரவேற்று உட்காரச் சொன்ன அவர், என்னை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். ஆன்மிக ஆர்வலரான என்னை அவர் கேட்டு அறிந்து கொண்டதன் மூலம் சிறிது என்னின் ஆர்வம் எதில் உள்ளது என்பதை அவர் ஆராய்வதாக இருந்தது.

நான் அவரிடன் புத்தரின் கருத்துக்களையும், அவரின் வழிமுறைகளையும் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த போது. அவர் அடிக்கடி மௌனமாகவும், தியான நிலைக்குச் செல்வதையும் கவனித்து வந்தேன்.

அவர் அடிப்படையாக சொன்ன விஷயம்  நாம் நமது மூச்சை கவனிக்க வேண்டும். நாம் நம் மூச்சில் கவனிப்பதன் மூலமே நமது எண்ண  ஓட்டத்தை வீணான விஷயங்களில் இருந்து திசை திருப்பி அதை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், எண்ணங்களின் வழியாக நமது சக்கி விரையமாவதை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

சக்தி நமது பேச்சால், செய்கையால் மட்டும் விரையமாவதில்லை, நமது எண்ணங்களில் மூலமும் விரையமாகிறது. ஆகையால் சக்தி விரையமாவது ஆன்மிகத்திற்கு ஏற்றதல்ல. தேவையான சக்தியை மட்டுமே நாம் தேவைக்கு பயன்படுத்த வேண்டும். மற்றபடி சக்தியை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.   ஒருகிணைந்த சக்திதான் உங்களை இந்த பருப்பொருள் அடங்கிய உலகை கடந்து சூட்ஷமமான சக்தி உலகை அடையச் செய்யும். அதன் மூலமாகத்தான் நீங்கள் இவ்வுலகில் இருந்தாலும், வேறு ஒரு பரிணாமத்தில் பயணிக்க முடியும். என்றும் இந்த உலகம் உலகாயதய எண்ணங்களின் வழியே தங்களின் சக்தியை செலவழித்து வருவதால், நுட்பான விஷயங்கள் பருப்பொருளை கடந்த நுண்ணிய அறிவு சார்ந்த விஷயங்களை தொ¬£லந்து  போகின்றன என்பதை கூறினார்.

ஒவ்வொரு விஷயத்திற்கும் இரண்டு பரிணாமங்கள் உண்டு.  பருப்பொருள் விஷயங்களில் முப்பரிமாணம் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது. ஆன்மிகத்தில் சொல்லப்படும் இரண்டு பரிணாமங்கள் ஒன்று உலகாதய பருப்பொருள் விஷயம். உலகில் நாம் காணும் இயற்கையின் உதவியால் உருவாக்கிய பொருள்கள் மற்றும் இயற்கை உருவாக்கிய பொருள்கள். இதிலிருந்து மற்றொரு பரிணாமமான சூட்ஷம பரிணாமத்திற்குச் செல்வது மற்றும் அதை பார்த்து அறிவது நம்மால் இயலாத ஒன்றாக இருக்கிறது.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *