[:en]எனது ஆன்மிகம் – 31 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

உண்மையில் அச்சக்தி உடையவர்களே நாம்.   ஆனால் உலாகதய பொருட்களின் நாட்டம் ஒரு திரையாக இருந்து சூட்ஷமத்தை அறிய வெட்டாது செய்கிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஸ்து£ல வடிவமும், சூட்ஷம வடிவமும் உண்டு. ஸ்து£லத்தை அறியும் நாம், சூட்ஷமத்தை அறிவதில்லை அதற்கான கருவி, புலன்களின் அறிமுகம் நமக்கு இல்லை. அதை அறிந்தவர்கள் சூட்ஷமத்தையும் அறிகிறார்கள். நமது சித்தர்கள், யோகிகள், முனிகள் அதை அறிந்தவர்களாக இருந்து. நமக்கு அதற்கான வழிகாட்டியுள்ளனர். அதை நாமும் பெற்றுக் கொள்வதன் மூலம் நமது வாழ்க்கையை முழுமை பெற்ற வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடியும்.

புத்தரின் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் நீங்கள் சூட்ஷமத்தை அறிந்து கொள்ள வழிகாட்டுகின்றன. அவரின் போதனைகள் திரிபிடகங்களாக தொகுக்க பட்டுள்ளன. அவை சுத்த பிடகம், அபிதம்ம பிடகம், வினய பிடகமாகும்.

இப்பிடகங்களை எனக்கு போதிப்பாக போதிபாலா கூறினார் . அதன் அறிமுகத்தையும் சிறிது நேரம் பேசினார். அதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தைப் பார்த்து சரி நாளை முதல் வாருங்கள் ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்கிறேன் என்றார்.

நானும் அடுத்த நாள் முதற்கொண்டு வகுப்புக்கு செல்ல தொடங்கினேன். வகுப்பு என்றால் ஏதோ நிறைய மாணவர்கள் இருப்பார்கள் என்று பொருள்  இல்லை.  ஏன் என்றால் நான் ஒருவன் மட்டுமே வருகை தந்திருந்தேன். எனக்கு மட்டுமே புத்தரின் கருத்துக்களை சொல்ல தொடங்கினார்.

எனது அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன். அடுத்த  நாள் சென்னை தினகரன் பத்திரிக்கையில் வேலைக்காக செய்திருந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வேலையில்  வந்து சேரும் அழைப்பு வந்தது. நான் சென்னை செல்ல வேண்டியிருந்ததால் நான் அவரிடம் எனது நிலையை சொன்னேன்.  பரவாயில்லை நான் சென்னைக்கு அடிக்கடி எக்மோரில் உள்ள புத்த கோயிலுக்கு வருவேன். வரும் சமயம் நாம் சந்திக்கலாம் என்று கூறினார்.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply