[:en]எனது ஆன்மிகம் – 34 ஆர்.கே.[:]

[:en]

இச்சபையானது ஜாதி, மதம், இனங்களுக்கிடையே எந்த வித்தியாசங்களையும் காணாது, உண்மையை தேடுபவர்களுக்கு ஒரு வழியாக இருந்து, எல்லா மதங்கள், இனங்களில் உள்ள உண்மையை உலகிற்கு கொண்டு வந்து, முழு சாமதானமான ஒரு புரிதல் உள்ள மனித சமுதாயத்தை கட்டமைப்பதாகும் இதன் நோக்கம்.

ஒரு ஆன்மிகத்தில் உண்மையை தேடுபவர், இச்சங்கத்தின் உறுப்பினர் ஆவதன் மூலம், பல்வேறுபட்ட மதங்களில், இசங்களின் கொள்கை, கோட்பாடுகளில் உள்ள உண்மை தன்மையை எல்லோருக்குமாக பகிர்ந்து, விவாதித்து அதில் உள்ள உண்மையை ஏற்றுக் கொள்ளும் பயிற்சி முறைகள் இங்கு உண்டு. உலக அளவில் இங்கு நடக்கும் பயிற்சி அரங்குகள், மற்றும் கருத்தரங்குகளில்  பல நாடுகளில் இருந்தும் ஆன்மிக ஆர்வலர்கள். இதில பங்கேற்று, தங்கள் பங்களிப்பை செய்கின்றனர். கூடுதல் விவரங்களை அடையாறில் உள்ள இவ்வமைப்பை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல வேண்டுமானால், நான் முன்னாள் கூறிய நண்பர், சுவாமி போதி பாலா ஒரு முறை,  அவர்  ஆன்மிகமார்க்த்தில் குறிப்பாக புத்தரின் போதனைகளை ஏற்றுக் கொண்டது எவ்வாறு என்று கேட்டபோது, அவர் கூறிய  பதிலானது, நான் சென்னை பிஎப் ஆபிஸில் பணியாற்றிபோது. அடிக்கடி தியோசபிக்கல் சொசைட்டி லைப்ரேரி செல்லும் வழக்கம் உள்ளவன். அங்கு ஒரு நாள் ஏசியா லைட் என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அது புத்தரின் போதனைகள், அதில் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லியது. நான் அதன்பால்  ஈர்க்கப்பட்டு, முழுவதுமாக அப்புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தரின் போதனைகள் குறித்து விரிவாக படிக்க விரும்பினேன். அதற்கும் அங்குள்ள படிப்பகம் உதவியது. அதன் மூலம்  அடிப்படையில்   கிருத்துவ மதத்தைச் சேர்தவனாகிய நான் புத்தரின்பால் ஈர்க்கப்பட்டு, பௌத்த துறவியானேன் என்று கூறினார்.

ஆக பலதரப்பட்ட மதங்களின் கூட்டுறவில், எந்த மதத்தின் கருத்தில் நீங்கள் உங்கள் பாதையை அமைத்துக் கொண்டு,  அதில்  உண்மையை காண முடியுமோ, அதில் செல்ல பிரம்ம ஞான சபை வழி வகை செய்கிறது. அதற்கு பிக்கு போதிபாலா ஒரு உதாரணமாக நான் சொல்ல முடியும்.

இப்படியாக உண்மையை தேடுபவர்களுக்கு பிரம்ம ஞானசபை ஒரு து£ண்டுதலாக, கருவியாக பயன்படுகிறது. ஆன்மிகமாகவும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாடுபடும் ஒரு அமைப்பாக பிரம்ம ஞானசபை அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள ஆலமரம் மிகவும் புகழ் பெற்றது. அதன் வளர்ச்சி மற்றும் வயது மிகவும் தொன்மையானது என்பதால், அம்மரத்தை காண்பதற்கென்றே சுற்றுலா கூட்டம், அடையாறு ஆலமரத்தை காண பிரம்ம ஞானசபைக்கு வருவதுண்டு. ஆக அடையாறு ஆலமரம் என்றால் பிரம்ம ஞானசபை என்பது யாவரும் அறிந்த ஒன்று.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *