[:en]எனது ஆன்மிகம் – 35 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஜெ.கிருஷ்ணமூர்த்தி

ஜெ.கிருஷ்ணமூர்த்தி நான் அறிந்து கொண்ட மற்றொரு தத்துவ ஞானி. இவர் அடையாறு பிரம்ம ஞான சபையால், உயர் உண்மைகளை அறியும் பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். சிறு வயது முதலே பிரம்ம ஞான சபையால் வளர்த்தெடுக்கப்பட்டு, உயர் உண்மைகளை அறிந்து கொள்ளும்  பயிற்சிகளில் பயிற்றுவிக்கப்பட்டு, ஒரு நாள் உலகில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு புத்தரின் மறுவருகை ஜெ.கிருஷ்மூர்த்தியால் நடக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டு எல்லோரும் காத்திருந்த சமயம். இவர்களின் இந்த பரிசோதனை முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்காமல், வெளிநடப்பு செய்து பிரம்ம ஞானசபை விட்டு வெளியேறினார்.

பின்னர்  தான் அனுபவத்தில் உணர்ந்த ஆன்மிக கருத்துக்களை மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார். அவரின் கருத்தால் உலகில் பலரும் ஈர்க்கப்பட்டு, பின்னர் அது ஜெ. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் என்று உருவானது.  சென்னை கீரின் வேஸ் சாலையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

ஆன்மிகத்தை உணர்ந்து கொள்ள, உண்மை விழிப்புணர்வை அடையும்  வழியை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்ளார்.  மனிதன் மூடமான கருத்தாக்களின் பிடியில் சிக்கி, தன் உண்மையான வாழ்கையை, வாழ்க்கையின் அர்த்தத்தை தொலைத்தவனாக, இயற்கையின் உறவை முறித்து வெகு துரம் சென்றவனாக இருக்கிறான்.  இயற்கையாக இல்லாத எல்லாம் உங்களுக்கு துன்பத்தை தரக் கூடியது. இயற்கையாக இருப்பது மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது. உண்மையான மகிழ்ச்சியை, நிரந்தரமான மகிழ்ச்சியை நீங்கள் இயற்கையாக நிகழ்வுகளை அனுசரித்து, அதை உற்று நோக்கி கற்றுக் கொள்ளாமல் நீங்கள் பெற முடியாது என்று கூறுகிறார்.

பிறரின் கருத்துக்களை தலையில் சுமந்து திரியும், சுமை துக்கிகளாகத்தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறான். அது வெவ்வேறு மத  மற்றும் இசத்தின் கருத்துக்களாக இருக்கலாம். எந்த ஒரு மனித மனத்தின் அடிப்படையில் உருவான கருத்துக்கள் உங்களுக்கான அமைதியை தரும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனின் தேவையும் வெவ்வேறானது. ஆகையால் தொகுக்கப்பட்ட அறிவோ, ஞானமோ அவனை முழுமையாகக்காது. வாழ்வை உற்று கவனித்து, சாட்சியாக இருப்பதன் மூலம், அவனுக்கு தேவை என்ன என்பதை அவனே உணர்ந்து கொள்கிறான். அதன் அடிப்படையில் வாழும் போது  மகிழ்ச்சியான,  திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்கிறார்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply