[:en]எனது ஆன்மிகம் – 36 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

சாட்சி தன்மைதான் நமக்கு முழு விழிப்பு தன்மையை கொடுக்கிறது என்றும் வாழ்க்கையை நாம் அதன் இயல்பை உணர்ந்து வாழும்போது நமக்கு அமைதி கிடைகிக்கிறது என்றும் கூறுகிறார். பழைமையான கருத்தாக்கங்களின் குப்பைகளை சுமந்து திரிவதால் என்ன லாபத்தை அடைந்துவிட்டீர்கள் மேலும் உங்கள் உயர் பண்புகளைத்தான் இழந்து போகிறீர்கள். இதன் மூலம் வாழ்க்கை இன்னும் குழப்பம் நிறைந்தாக மாறி போகிறது. தெளிவான குட்டையை குளப்புவது போல், உங்கள் வாழ்க்கையை குழப்பி,  பிறகு ஏதாவது உயர் சக்தி நமக்கு உதவ வராதா என்று தேடி அலைகீறிர்கள்.

அங்குதான் மதங்கள் உங்களிடத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. பிறகு உங்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்துவிடுகிறது. உன் மதம் பெரியது, என் மதம் பெரியது என்று. உண்மைநிலை அங்கு உங்களிடம் விலகிப் போகிறது. மதங்களால் தான் இங்கு அதிக யுத்தங்கள் நடந்துள்ளன. மதத்தை நிறுவ நாடு பிடித்தல் நடந்துள்ளது. மத மோதல்கள் யுத்தங்களாக மாறியுள்ளது. இப்படியாக ஒன்றுக்கும் உதவாத பிறரின் கருத்தாக்கங்களுக்கு பின்னால் பயணப்பட்டு உண்மையின் நிலையில் இருந்து வெகு துரம் போய்விடுகிறீர்கள்.

கடவுள் சார்ந்த உங்கள் கற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்து, அதை பாதுகாக்க முனைகிறீர்கள். அதில் எவரும் குறை சொல்ல நீங்கள் அனுமதிப்பதில்லை. உங்களின் கற்பனைகளை குறை சொல்பவர்களை நீங்கள் எதிர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களின் பாதுகாப்பு உங்கள் கற்பனையை பாதுகாப்பதில்தான் உள்ளது என்று நினைக்க ஆரம்பிக்கிறீர்கள். நண்பர்களே இதுதான் சூழ்ச்சி வலை, இந்த வலைக்குள் மாட்டிக் கொண்டீர்கள் என்றால், பிறகு வெளியே வருவது அத்தனை எளிது அல்ல. மாசுமருவற்ற உங்கள் இருப்பு நிலை எத்தனை மாயா ஜலங்களால் சிதைக்கப்படுகிறது என்று என்றாவது நீங்கள் உணர்ந்தது உண்டா?. அப்படி நீங்கள் உணர்ந்தால்,  உண்மையை நோக்கிய பயணத்தில் உங்கள் முதல்படியை நீங்கள் எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.  அப்படி இல்லாது தர்க்கத்திலே உங்கள் காலத்தை ஒட்டலாம் என்று நினைத்தால், அது நீங்கள் உங்களுக்கு நீங்களே தேர்ந்தெடுக்கும் முடிவாகும். ஒருநாள்  அதில்  நீங்கள் களைத்து போகும்  போதுதான். நாம் ஒன்றும் இல்லா வெற்று இடத்தில் கற்பனைகளை புகுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply