[:en] இந்திய நீதி துறையில் பாரபட்சம் –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

சமானியனின் அடைக்கலம் தேடும் இடம், நீதி தேடும்  இடம். ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண் என்று சொல்லப்படும் இந்திய நீதி துறை அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நால்வர் பகிரங்கமாக பத்திரிக்கைகளை சந்தித்து, தலைமை நீதிபதி மேல் தாறுமாறான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு நீதிபதி செல்மேஸ்வரர், ரஜ்ஜன் கோகோயி, குரியன் ஜோசப் மற்றும் மதன் பி. லோகுர் ஆகியோர் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைககள் ஜனநாயக முறைப்படி இல்லை. இது நாட்டிற்கு மிக ஆபத்தாக முடியும் என்று  பகிரங்கமாக அறிவித்தனர்.

நாட்டின் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வரும். கோலிஜியம் என்று சொல்லக் கூடிய நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள். இவர்களின் குற்றச்சாட்டை சாதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ள  முடியாது. இவர்களின் நீதிமன்ற நடவடிக்கைகள், தீர்ப்புகள் பலராலும் பாராட்டப் பெற்றுள்ளது.  உச்ச நீதிமன்ற  நீதிபதிகளில் நால்வரும் மூத்த நீதிபதிகள். அதில் ரஜ்ஜன் கோகோயி வரும் அக்டோபர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளவர்.

கடந்த சில வருடங்களாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. முன்னாள் பிரபல வழக்கறிஞர் திரு.சாந்திபூஷன் 7 நீதிபதிகள் மேல் தொடுத்த ஊழல் புகார். இதுவரை விசாரிக்கப்படாமலே உள்ளது. தேவையான ஆதாரங்கள் மூடி சீலிடப்பட்ட கவரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு இதை விசாரிக்க தயக்கம்.

சாமன்யன் இறுதி நம்பிக்கை தவிடு பொடியாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து யார் அக்கறை கொள்வது. இன்று இப்பிரச்னை வெடித்துள்ளதற்கு என்ன காரணம்?

குஜராத் இஷ்ரத் ஷஹான் என்கெண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ கோர்ட் நீதிபதி லோயாவின்  மர்ம மரணம் குறித்த வழக்கு வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது,  அது மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படாமல், தற்போது பதிவியேற்றுள்ள இளநிலை நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரணம் அரசியல் தலையீடு.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே மேற்குரிய நான்கு நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நடைமுறையில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டி கடிதங்களை கொடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

அவர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டுகளை எழுபக்க கடிதங்களாக கொடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதில் முக்கியமானது தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும்.  விசாரித்த வழக்குகளை இடைமறித்து வேறு பெஞ்சுக்கு மாற்றுவதாகவும் கூறியுள்ளனர். இது வழக்கமான நடைமுறைகளுக்கு நேர் எதிராகவும், ஜனநாயக விரோதமாகவும், தன்னிச்சையானதாகவும் இருப்பதால் நாட்டின் நீதிதுறையில் ஜனநாயகம் இல்லை என்று கேள்வி எழுந்ததாலும், தாங்கள் நேரடியாக பாதிகப்பட்டதாலும் இதை மக்கள் அறிய வேண்டும் என்பதாலும், பத்திரிகையை சந்தித்தாக கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், இது மிகவும் துரதிஷ்டவசமானது. இதற்காக மிகவும் வருந்துகிறோம்.  வேறு வழியில்லை காரணம் இன்னும் 20 வருடங்கள் கழித்து வருபவர்கள். இன்றைய நிலையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்களே,  ஏன்?  என்று கேள்வி கோட்டால் என்ன செய்வது. நடைபெறும் தவறுகளுக்கு தாங்களும் மௌண சாட்சியாக இருந்ததாகிவிடும். அப்படியாக எங்கள் ஆன்மாவை விற்க நாங்கள் தயாராக இல்லை என்பதாலே நாட்டு மக்களை சந்தித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

பலகாலமாக நீதிமன்ற சீர்திருந்தங்களை பலரும் வலியுறுத்தி வந்துள்ள நிலையில், இப்போதாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு, தேவையான நடவடிக்கைகளை செய்து நீதிமன்ற சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். நீதி விலைபேசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லேயேல் இந்திய ஜனநாயகம் கேள்விக்குரியாகும் நாள் வெகுதுரம் இல்லை.

[:]

You may also like...

Leave a Reply