[:en]எனது ஆன்மிகம் – 39 ஆர்.கே.[:]

[:en]

தம்ம  சேது விபாசனா தியான மையம்

நான் அடுத்ததாக உங்களுக்கு சொல்லப் போவது, தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில், பல்லாவரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற இடத்தில் அமைதியான சூழலில் ‘தம்ம சேது’ என்ற விபஸ்ஸனா தியான மையம்  பற்றித்தான். இம்மையத்திற்கு செல்லுமாறு எனது நண்பர்கள் சில பேர் வற்புறுத்தியதின் வாயிலாக, அதை தெரிந்து கொள்ளும்  பொருட்டு சென்றேன்.

விபாசான தியானம் புத்தர் தனது சீடர்களுக்காகவும், உலக மக்களுக்காகவும் உருவாக்கிய தியானம். இப்பயிற்சி அதன் தன்மை மாறாமல் 3000 வருடங்களுக்கு முன் எப்படி செய்யப்பட்டதோ, அதன் பாரம்பரியம் மாறாமல் கற்றுக் கொடுக்கப்படும் இடம் உலகிலேயே பர்மாவில் மட்டுமே. அப்படிப்பட்ட அந்த தியான முறையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முகமாக முதன் முதலாக அதை அறிமுகப்படுத்தியவர் சத்ய நாராயணன் கோயாங்க என்பவர். இவர் பிறந்து வளர்ந்தது பர்மாவில். அங்குள்ள புத்த துறவி சயாகி யூ பான் கின்  என்பவரிடம்  14 வருட பயிற்சிக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு இந்தியாவில் நிரந்தரமாக தங்கி இப்பயிற்சியை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க  ஆரம்பித்தார்.

45 வருடங்களாக தனது 89 வயது வரை, 2013 ல் இவர் வாழ்நாள் முடியும் வரை இப்பணியை தொடந்து செய்து வந்தார். இந்திய அரசால் இவருக்கு பத்மவிபூஷண் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மத, இன வேறுபாடுகள் இல்லாமல் இப்பயிற்சி அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது.

இப்படிப்பட்ட பயிற்சிக்கே நான் அங்கு சென்று இருந்தேன். புத்த பிரானால் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பயிற்சியை அதன் முறைகள் மாறாமல், அதன் வடிவம் மாறாமல் அப்படியே அதை கற்றுக் கொள்ளப் போகிறோம் என்று நினைக்கும் போதே, எனது ஆனந்தத்தை சொல்லி மாளாது. அப்படியரு ஆனந்தம் எனக்குள். காரணம் 3000 வருடங்களுக்கு முன் புத்தபிரான் கற்றுந் தந்த தியானக்கலையை அதன் வடிவம், முறைகள் மாறாமல் கற்றுக் கொள்ள போகிறோம் என்கின்ற போது, புத்தரை எனக்கு கற்பிக்கப் போகிறார் என்ற மனயெழுச்சி ஏற்பட்டது என்றே சொல்லாம். புத்தரின் அந்த தியானக் கலைக்குப் பெயர் அவரே சொன்னது விபாசான. அதன் பெயரிலேயே அந்த கலை நமக்கு கற்றுத் தரப்படுகிறது.

தொடரும்       முந்தயபகுதி

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *