[:en]பஸ் கட்டண உயர்வு பரிதாப நிலையில் தமிழக மக்கள் —-  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

தமிழகத்தில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரியவில்லை. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மக்கள் விரோத அரசாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசை மக்கள் விரும்பவில்லை என்பதை ஆர்.கே நகர்  இடைத்தேர்தலில் காண்பித்துவிட்டார்கள்.  உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளம் நடுங்கிப் போய், இல்லாத சப்பைக் கட்டை கட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசு. எத்தனை முறை நீதிமன்றம் சொல்லியும் நடத்த தைரியம் இல்லை. காரணம் பெரும் தோல்வியை சந்திக்கும் என்பதே நிலைமை.

இப்படியாக இருக்கும் இந்த  மக்கள் விரோத அரசு, இப்போது பஸ் கட்டண உயர்வை அறிவித்து, பெரும் விரோதத்தை சம்பாதித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் பஸ் கட்டண உயர்வை உயர்த்தாது, பட்ஜெட்டில்  ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இழப்பீடுகளை சரி செய்து வந்தது திமுக அரசு. அத்தகைய பெரிய மனது இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஏன் என்றால் பல முறை பஸ் கட்டணங்களை உயர்த்திய ஜெயலலிதா வழிவந்தவர்கள் தானே இவர்கள். ஆகையால் மக்கள் விரோத அரசாகத்தான் இவர்கள் செயல்படுவார்கள் போலும்.

நிர்வாக ஊழலில் ஊறித் திளைக்கும் போக்குவரத்து கழகங்களை நிர்வகிக்க திராணியற்ற அரசு, மக்கள் மேல் கட்டணச் சுமையை சுமத்துவது, மக்கள் நல அரசு அல்ல மக்கள் விரோத அரசு என்பதை பட்டவர்த்தனமாக   நிருபித்துள்ளது.

இலவசங்களை வாரி வழங்கி தன்மானமற்ற மக்களாக உருவாக்கி, தங்கள் ஊழல்களை மறைக்கும் அரசாக உள்ளவர்கள், அந்த நிதிகளை மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து கழங்களை மேம்படுத்த உபபோகித்திருக்கலாம். அதை விடுத்து எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு, எம்ஜிஆர் நுற்றாண்டு என்று உதாரித் தனமாக செலவு செய்து கொண்டிருப்பதை பாமரன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.

தமிழக போக்குவரத்துக் கழங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் கட்டண உயர்வு தவிர்க்க  முடியவில்லை என்பவர்கள், எத்தனை கட்டண உயர்வை கொண்டு வந்தாலும், இதை மீட்டெடுக்க முடியாது என்பதே உண்மை. காரணம்  நிர்வாக ஊழலில் உச்ச பட்ச அளவை தொட்டுள்ளதாக விமர்சனம் வருகிறது.

60 சதவீத உயர்வு என்பது ஈவு, இரக்கமற்ற உயர்வு, சாதாரண  அடித்தட்டு மக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்தை கட்டண உயர்வால், அவனை சிரமப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை அவர்கள் உணர்ந்தார்களா? இல்லையா என்று தெரியவில்லை.

மக்கள் கொதித்துப் போய் வீதிகளுக்கு வந்து, தங்கள் எதிர் உணர்வுகளை காட்டி வருகின்றனர். மக்கள் தலைவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக எதிர்த்துள்ளனர். அரசு  அகம்பாவமாக  கட்டண உயர்வை பரிசீலிக்க முடியாது என்று சொல்கிறது. இப்போக்கு கடுமையான விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பதும், இவர்கள் ஆட்சி என்று ஒழியும் என்று மக்கள் அனுதினமும் ஆண்டவனை வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதுமே உண்மை.

7 ஆண்டுகளாக உயர்த்தவில்லை என்கிறார்கள்.  ஆனால் இவர்கள் சம்பளங்களை உயர்த்திக் கொள்வார்கள். இவர்களை தட்டிக் கேட்டும் ஆளுமை உள்ள தலைவர்கள் தமிழகத்தில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.  கத்துக் குட்டிகள் பலரும் அரசியலுக்கு வருவது மட்டுமே வாடிக்கையாக உள்ளதே தவிர.  மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள், மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் தலைவர்கள், அதற்காக எந்த தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கும் தலைவர்களை தமிழ்நாடு இன்னும் பெறவில்லை என்பதே உண்மை. இது போன்ற ஏழை  மக்கள்களுக்கு  விரோதமான அரசுகளை கண்டித்து சரிபடுத்த வேண்டிய வேலையை செய்ய முடியவில்லை. வெத்து அறிக்கைகளால் என்ன நடந்துவிடப்போகிறது. அதைத்தான் இன்றைய அரசியல் தலைவர்கள்  செய்து  கொண்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கில் தமிழக அரசு சென்று கொண்டிருந்தால், அது சாதாரண  ஏழை மக்களை புறம்தள்ளும் அரசாக இருக்கிறது என்பதை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

தமிழக நிதிநிலைமையை எப்படிச் சரிசெய்ய வேண்டும். அது ஏழை எளிய மக்களை பாதிக்காது எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒன்றும் தெரியவில்லை, அப்படி எதாவது தெரிந்திருந்தால், இப்படியான அறிவிப்புகள் வராது.  இத்தகைய அதீத உயர்வு மிகவும் கண்டனத்துக்குரியது. இதை உடனே வாபஸ் வாங்க வேண்டும், இல்லேயேல் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் கட்டண உயர்வு இருக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி என்று மிகவும் பொருளாதார மந்த நிலையில் உள்ள போது,  ஏழை எளிய மக்களை வருத்தும் செயலில் அரசு இருப்பதை கண்டிக்கிறோம்.

[:]

You may also like...

Leave a Reply