[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

நாங்கள் சார்லஸ் சுவாமியிடம் விடைபெற்றுக் கொண்டு எங்கள் இருப்பிடம் திரும்பினோம்.  அதன் பிறகு நாங்கள் அவர் ஆஷ்ரமத்தில் இருப்பதை அறிந்தால் சந்திக்க செல்வோம்.

சுவாமி சார்லஸ் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள கேரளத்து நாரயண குரு ஆஷ்ரமத்தில் தான் தங்கியுள்ளார். அவர் குறித்து அறிந்த போது. கேரளாவில் கத்தோலிக்க கிறித்துவ குடும்பத்தில் பிறந்து, ஆன்ம வேட்கையில் உண்மையை தேடி திரிந்த போது, வர்கலையில் உள்ள நாரயண குரு ஆஷ்ரத்தை அடைகிறார். அங்கிருந்து ஊட்டியில் உள்ள நாரயண குரு ஆஷ்ரமத்திற்கு பயிற்சிக்காக வருகிறார். அங்குள்ள தலைமை குரு அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கான ஆன்மிக பயிற்சிகளை கொடுக்கிறார்.

ஊட்டி ஆஷ்ரமத்திலேயே தான் உண்மை நிலையான என்லைட்மெண்ட் என்று ஆங்கிலத்திலும், ஞான ஒளி என்று தமிழிலும் அழைக்கப்படும்  ஆன்மிகத்தின்  உச்ச நிலையை அடைந்ததாக சொன்னார். அதன் பின் சென்னை சிந்தாதரிப் பேட்டை நாரயண குரு ஆஷ்ரமத்திற்கு பொறுப்பாளராக அனுப்பப்படுகிறார். அதிலிருந்து அவரின் பயணம் கேரளாவுக்கும், சென்னைக்குமாக இருக்கின்றது. அருகில் உள்ள குப்பத்து மக்களோடு ஒருவராக ஆகிவிடுகிறார். அவர்களின் நலன், இவரின் நலன் எல்லாம் ஒன்றாகி விடுகிறது. சாமி சார்லஸ்க்கு குப்பத்து ஜனங்கள் பாதுகாப்பு அரணாக திகழ்கிறார்கள்.

இதன் ஊடாக பல வெளிநாட்டில் உள்ள சீடர்களுக்கு ஆன்மிக பயிற்சிகளை சொல்லித் தர ஆறு மாதங்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள கண்டங்களில் பல நாடுகளிலும் இவரின் சீடர்களின் அழைப்பின் பேரில் சென்று ஆன்மிக சாதகங்களை செய்விக்கிறார்.

நான் 2005 ஆம் ஆண்டு முதல் அங்கு சென்று வருகிறேன். சென்னையிலும், கேரளத்திலும் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவருக்கு சீடர்கள் உண்டு.  அவர்களுக்காக இவர் ஆன்மிக வகுப்புகளையும், சாதகங்களையும் செய்விக்கிறார்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply