[:en]எனது ஆன்மிகம் – 49 ஆர்.கே[:]

Advertisements

[:en]

இந்நிலையில் உங்கள் மனம் மிகவும் சக்திசாலியாக ஆகுவதை நீங்கள் உணர முடியும். மிகவும் ஆனந்தமாக, சாட்சியாக இருக்கும்.  நீங்கள் விரும்பியது உங்களை நோக்கி இலகுவாக வருவதை உணர முடியும். எனக்கு இந்நிலை குறித்த உண்மையான நிலை தெரியவில்லை. இதை தொடர்ந்து முயற்சி செய்து, மெய்ஞான நிலையை அடைய வேண்டும். இடையில் மனம் அதீதமாக வெளிப்பட்டால், அதன் வழியில் நீங்கள் சென்றால் பிறகு உங்கள் நிலை மீண்டும் பழைய நிலைக்கே மிக சாதரண மன நிலைக்கு வந்து விடுவீர்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. தொடர்ந்து பயிற்சிகளை செய்து ஒரே தாண்டுதலாக சத்தோரி நிலையில் இருந்து  மெய்ஞான நிலையை அடைய வேண்டும் என்கிறார். புத்தர், இயேசு மற்றும் பல மகான்கள் அடைந்த அந்த பூரணத்துவத்தை எல்லோரும் அடைய முடியும் என்று வழிகாட்டுகிறார்  ஒஷோ.

இப்படியாக நான் அடைந்த அனுபவத்தின் மூலம் நான் தொடர்ந்து ஓஷோவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். பிறகு ஓஷோ புத்தகங்களை படிக்கும் பல  நண்பர்களை பார்க்க முடிந்தது. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தகங்களை பறிமாறிக் கொண்டோம். ஓஷோவிற்கான நினைவு தினம், ஞானம் அடைந்த தினம் என்று பல்வேறு விழாக்களையும் நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தோம். இப்படியாக ஒஷோவிற்கு எண்ணற்ற என்னால் ஆன பணிகளையும் செய்து வந்தேன். ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எல்லாம் ஓஷோவின் புத்தகங்களையும், அவரின் கருத்துக்களையும் சொல்லி அவர்களையும் படிக்க துண்டினேன்.

ஓஷோவின் ஆஷ்ரமம் தமிழ்நாட்டில் திருச்சியில் துவாக்குடி என்ற சிறிய ஊரில் அமைந்துள்ளது. சுவாமி மோகன் பாரதி என்ற நபர் அதை நடத்தி வருகிறார். 1990 ஆம் ஆண்டு, நான் அங்கு சென்று வந்தேன். அழகிய, அமைதியான ஆஷ்ரமம்.

ஓஷோ ஆஷ்ரமத்தில் தலைமை நிலையம் மகாராஷ்ர மாநிலம் பூனே நகரில் அமைந்துள்ளது. அங்கு உலகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கனா சீடர்கள் தினமும் வருகை தந்து,  ஆன்மிக பயிற்சிகளை செய்து வருகிறார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கடும் விமர்சனத்திற்கும், எதிர்ப்புகளுக்கும் ஆட்பட்டது இந்த ஆஷ்ரமம். இவர்களின் நடைமுறை சனாதன இந்து மற்றும் பிற மதங்களின் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதாக இந்து தீவிரவாதிகள் அவருக்கு எதிராக பல தொந்தரவுகளை செய்து வந்தனர்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply