[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஓஷோவின் ஞானக் கருத்துக்களில் நாம் அனைத்து மதங்களின் உயரிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மனித மனங்களை செம்மை செய்வதற்காகவே மதங்கள் தோன்றின. காட்டு மிராண்டியாக வாழ்ந்த சமூகம் பண்பட்ட நாகரிக சமூகமாக மாற தலைப்பட்ட போது, அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளை களைய அல்லது சமன்படுத்த, சீர்படுத்த தோன்றியவைகளைதான் மதங்கள். நாட்பட்ட அளவில் அதில் முரண்பாடுகள் ஏற்பட,  பல கிளை மதங்கள் தோன்றின, மனிதனின் சுயநலத் தேடல்கள் மதங்களின் வாயிலாக வெளிப்பட்ட போது, அது மதக் கலவரங்களாக,  மத  துவேஷங்களாக மாறின.  மதங்களின் அடிநாதம் சகோதரத்துவம், அன்பு,  பர உபகாரம் என்பதில்தான் அடங்கியுள்ளது.

ஓஷோ மதங்களின் உயரிய கோட்பாடுகளை அதன் கூர்மையை மழுங்கி விடாமல் நமக்குச் சொல்லித் தருவதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்பேன். இன்றைய பல கார்ப்பேரட் சாமியார்கள் அவரைத்தான் தங்கள் ரோல் மாடல்களாக வைத்துக் கொண்டு, அவரின் கருத்துக்களை தங்களது கருத்துக்களாக வெளியிட்டுக் கொண்டு, உலா வருகிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓஷோவின் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்கள்.  மற்றவர்கள் பேசும் போது, அவர்கள் எங்கெல்லாம் ஓஷோ மறைத்து,  தங்கள்  கருத்தாக  அவர்  சொன்ன விஷயங்களை கையாளுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஓஷோ நவீன மனதிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்த தியான முறைதான் டைனமிக் தியானம் என்பது. இது  உலக பிரசித்த பெற்ற தியான முறை. இது நமது நவீன மனச் சிக்கல்களை களையும் வண்ணம், புதிய புத்துணர்ச்சியை உணரும் வண்ணம் செயல்படுத்தப்படும் ஒரு மணி நேர தியான பயிற்சியாகும். இது தற்போது தொடர் தியானமாக 21 நாட்கள், மாதம் தோறும் சென்னை ஓஷோ தியான சென்டரில் சுவாமி. மோட்ஷா அவர்களால் ஆழ்வார்பேட்டையில் சொல்லித் தரப்படுகிறது.

இந்த ஒரு மணி நேர பயிற்சியில் மூச்சுப் பயிற்சியுடன், பல வித உடல் சார்ந்த பயிற்சிகளும் அடங்கும், இதன் மூலம் மனதும், உடலும் அங்கு இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப புத்துணர்வு பெறுகிறது.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com