[:en]ஜெ. படத் திறப்பு மரபு மீறலா?  –   ஆர்.கே.[:]

Advertisements

[:en]

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலிலதாவின்  படத்தை  திறப்பதாக எடப்பாடி அரசு முடிவெடுத்து,  சபாநாயகர் தனபால்  திறந்து வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இது சட்ட சபை மரபுகளை மீறும் செயலாகும்.  சட்டசபை மாண்புகளை குலைக்கும் செயலாகும் என்று கடும் காட்டமாக எதிர்க்கட்சி தலைவர்  மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   திமுக,  காங்கிரஸ்   படத்    திறப்பை   புறக்கணிப்போம்   என்று  சொல்லியுள்ளன.

பல்வேறு எதிர்கட்சிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.  இது தவறான முன்னுதாரணமாக அமையும்  என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத எடப்பாடி அரசு,  குற்றவாளி என்று  உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்வரின் படத்தை சட்டம் இயற்றும் இடத்தில் திறப்பது. இது எப்படிப்பட்ட அரசு என்பதை மக்களுக்கு எடுத்துச்  சொல்வதாக இருக்கிறது. இதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது. பல அரசியல் சாசனத்திற்கு எதிரான விஷயங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசு, இதையும் வேடிக்கை பார்க்கிறது. இன்னும் சொல்லப் போனால் மாநில பாஜக தலைவர்  தமிழிசை வரவேற்று  பேசுகிறார்.

இப்படியாக  குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.  மக்கள்  இதை  முகச்சுளிப்போடு பார்க்கிறார்கள்.  இந்த  ஆட்சியில் இதைத்  தவிர வேறு எதை அவர்கள் பார்க்க முடியும்.

பிரதமர் தலைமையில் படத்தை திறப்பதற்கு காத்துக் கிடந்த அதிமுக அரசுக்கு இறுதியில் தோல்வியே மிஞ்ச,  இனி எத்தனை நாள் ஆட்சி என்ற கணக்கை எண்ணிக் கொண்டிருக்கும் எடப்பாடி  அரசு, அவசர அவசரமாக இதை செய்ய காத்திருக்கிறது.  படத் திறப்பை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வோம்  என்று  அன்புமணி  இராமதாசு தெரிவித்துள்ளார். ஜெயலிலதாவின்  படத்தை அரசு விழாக்களில் பயன்படுத்த கூடாது என்ற வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.  அது விசாரணைக்கு வரும் நாளே,  இந்நிகழ்வு இருப்பது,  எதை சுட்டிக் காட்டுகிறது  என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும்கால சந்ததியினருக்கு வரலாறுதான் பாடம் சொல்லித் தரும்.  இத்தகைய  நிகழ்வுகள் எத்தகைய பாடத்தை சொல்லித் தரும் என்பதை  மக்கள்  எண்ணி பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.   மத்திய  அரசின்  ஆதரவோடு செயல்படும் இந்த மாநில அரசு,  தவறான முன்னுதாரணங்களை எடுத்துச் செல்வது அது இன்னும் தன்னை தாழ்த்திக் கொள்வதாகத்தான் அமையும். அதிமுக கட்சிக்காரர்களுக்கு அவர்களின் தலைவி மதிக்கத் தக்கவாறாக இருக்கலாம்.  ஏன்  என்றால் அவரால் ஆதாயம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.  அதற்காக அவர்கள் இப்படத்திறப்புக்கு வக்காலத்து வாங்கலாம்.  இன்னும் சொன்னால்,  முன்னாள்  முதல்வர்  ஜெயலலிதாவால்  ஆதாயம் அடைந்தவர்கள்  அவரைப் போற்றலாம், பாராட்டலாம். படத் திறப்பை நியாயப்படுத்தலாம். ஆனால் சட்டத்தின் முன் குற்றவாளி என்று இருமுறை அறிவிக்கப்பட்டவர்  ஜெயலலிதா, இதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தால் தண்டப்பட்டவர்  படம்  சட்டசபையில் திறக்கப்பட்டால்,  அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதான செயலாகத்தான் அது அமையும்.  இந்த நாடு சட்டத்தின் மாண்பின் அடிப்படையில் நடப்பதாகத்தான் சொல்லப்படுகிறது.  இதை ஆங்கிலத்தில் ரூலாப் லா என்பார்கள்.  அந்த சட்டத்தை இயற்றும் சட்டசபையில் ஒரு குற்றவாளியின் படத்தை திறப்பது, இவர்களின் அரசியல் அனுகுமுறை எத்தகையது என்பதை எங்கே போய் சொல்வது என்றுதான் தெரியவில்லை. காலத்தின் கொடுமை என்று சொல்வார்களே. அப்படித்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  இந்தியாவில் சட்டத்தின் மாண்பும், அதன் ஆட்சியும்  இருக்கிறதா  என்று  எண்ணத் தோன்றுகிறது.

[:]

You may also like...

Leave a Reply