[:en]பலஹீனமடைகின்றனவா வங்கித்துறை? – ஆர்.கே.[:]

Advertisements

[:en]
வங்கி செயல்பாடு உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பண்டமாற்ற முறையில் இருந்த சுதந்திரமும், சமூக நோக்கமும் முற்றிலுமாக தகர்ந்தது. அதன்பின் சுரண்டலும், சுயலாப நோக்கமும் சேமிப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு  கொள்ளை  தான் நாள்தோறும் நடந்து வருகின்றன.

சில பல ஆயிரம், சில பல லட்சங்களாக இருந்த கொள்ளைகள் இப்போது பல்லாயிரக்கணக்கான கோடிகளாக மாறியுள்ளன. மனிதனின் தீராத ஆசைகள் அவனை தவறான வழிகளில் நடத்தி சென்று, பொது அமைதிக்கும், நலத்திற்கும் பங்கம் வகிப்பதாக உள்ளதை இன்று நாடு அறிந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த வங்கி முறைகேடுகளான விஜய் மல்லையாவின் 10,000 ஆயிரம் கோடி பெரிதாக பேசப்பட்டது. தற்போது நீரவ் மோடியின் 11,000 கோடி அதனை மிஞ்சும் கொள்ளையாக அறியப்படுகிறது. மேலும் துண்டு துக்கடாவாக சில தொழில் அதிபர்களின் வங்கி மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.

இவை அனைத்தும் ஏதோ வங்கி ஏமாந்த சோனகிரி எடுத்து கொடுத்துவிட்டார்கள். அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்பதல்ல. கூட்டுக் கொள்ளையர்கள்தான் இந்த வங்கி ஊழியர்களும். நாடு முழுமைக்கும் நடந்த வங்கி குளறுபடிகள் சம்பந்தமாக ஒட்டு மொத்தமாக 30,000 வங்கி ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருப்பு ஆடுகள் வங்கி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இந்த சதிவேலைகளில் பங்காளிகளாக உள்ளனர்.  இவர்கள் மீது  கடுமையாக நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.  வேலியே  பயிறை மேய்வதாக இவர்கள்  செயல்கள் அமைந்துள்ளது. பொதுமக்களின்   பண  பாதுகாப்புக்கு  உத்தரவாதம் வழங்க வேண்டிய வங்கி ஏமாந்த சோனகிரியாக காட்சி அளிப்பது.  வங்கி   நடைமுறையில்  உள்ள    ஓட்டைகளைக் காண்பிக்கிறது.  அந்த  ஓட்டபானையில் வழிந்து ஓடிகிறது  மக்கள்  சேமிப்பு என்பதை வங்கியை நடத்துபவர்கள்  உணர  வேண்டும்.   அதற்கு   கடும் தண்டனைகளை அதிகாரிகளுக்கும்,  வங்கி   ஊழியர்களுக்கும்  வழங்க    வேண்டும்.

இதற்கு அப்பட்டமான உதாரணம் நீரவ் மோடியின் 11,000 கோடி ஊழல். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெறும் போலி ஆவணங்கள் மூலம் ஊழல் நடந்துள்ளது. லேட்டர் ஆப் கியராண்டி என்று சொல்லப்படும். வங்கி உத்தரவாத கடிதத்தின் மூலம் இந்த கொள்ளைகள் நடந்துள்ளது. கொள்ளை அடித்த நீரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கி உள்ளான்.

பதுங்கியுள்ள நீரவ் மோடியை இன்னும் பிடித்தபாடில்லை. ஏற்கனவே மக்கள் பணத்தை சூறையாடிய விஜய் மல்லையா, உல்லாசமாக இங்கிலாந்தில் சுற்றி வருகின்றனான். அவனை இந்தியா கொண்டு வர முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் உள்ளது.   இது  திருடர்களுக்கு அரசாங்கம் நடத்துகிறார்களோ, இல்லை திருடர்களே அரசாங்கம் நடத்துகிறார்களா என்ற கேள்வியைத்தான்  எழுப்புகிறது. ஏன் என்றால் எந்த ஒரு நடவடிக்கையிலும் போதுமான முன்னேற்றம் இல்லை.  ஒரு பக்கம் பல லட்சம் கோடி வராக் கடன்களை எப்படி வசூலிக்கப் போகிறோம் என்ற கவலையில் உள்ள வங்கித் துறை,  இப்படியாக ஊழலில் ஊறித் திளைப்பது ஏற்புடையது அல்ல. இதில் அரசு உடனடி கவனம் கொடுத்து நிலமையை சீர் செய்ய வேண்டும்.

பல நுறு கோடி மக்களின் சேமிப்புகளை இப்படியாக தவறான மனிதர்களுக்கு கடனாக கொடுத்து, கொள்ளை அடிப்பதை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்பது போல வழக்கப்படி பிரதமர் வீராவேஷம் காட்டியுள்ளார். உங்கள் வேஷம்  வெளுக்கும் முன் உங்கள் வார்தைகளில் உண்மை உள்ளது என்பதை நிருபீயுங்கள் பிரதமரே.

[:de]பலஹீனமடைகின்றனவா வங்கித்துறை – ஆர்.கே.
வங்கி செயல்பாடு உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பண்டமாற்ற முறையில் இருந்த சுதந்திரமும், சமூக நோக்கமும் முற்றிலுமாக தகர்ந்தது. அதன்பின் சுரண்டலும், சுயலாப நோக்கமும் சேமிப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளையும் தான் நாள்தோறும் நடந்து வருகின்றன.
சில பல ஆயிரம், சில பல லட்சங்களாக இருந்த கொள்ளைகள் இப்போது பல்லாயிரக்கணக்கான கோடிகளாக மாறியுள்ளன. மனிதனின் தீராத ஆசைகள் அவனை தவறான வழிகளில் நடத்தி சென்று, பொது அமைதிக்கும், நலத்திற்கும் பங்கம் வகிப்பதாக உள்ளதை இன்று நாடு அறிந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த வங்கி முறைகேடுகளான விஜய் மல்லையாவின் 10,000 ஆயிரம் கோடி பெரிதாக பேசப்பட்டது. தற்போது நீரவ் மோடியின் 11,000 கோடி அதனை மிஞ்சும் கொள்ளையாக அறியப்படுகிறது. மேலும் துண்டு துக்கடாவாக சில தொழில் அதிபர்களின் வங்கி மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.
இவை அனைத்தும் ஏதோ வங்கி ஏமாந்த சோனகிரி எடுத்து கொடுத்துவிட்டார்கள். அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்பதல்ல. கூட்டுக் கொள்ளையர்கள்தான் இந்த வங்கி ஊழியர்களும். நாடு முழுமைக்கும் நடந்த வங்கி குளறுபடிகள் சம்பந்தமாக ஒட்டு மொத்தமாக 30,000 வங்கி ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருப்பு ஆடுகள் வங்கி அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இந்த சதிவேலைகளில் பங்காளிகளாக உள்ளனர்.
இதற்கு அப்பட்டமான உதாரணம் நீரவ் மோடியின் 11,000 கோடி ஊழல். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் வெறும் போலி ஆவணங்கள் மூலம் ஊழல் நடந்துள்ளது. லேட்டர் ஆப் கியராண்டி என்று சொல்லப்படும். வங்கி உத்தரவாத கடிதத்தின் மூலம் இந்த கொள்ளைகள் நடந்துள்ளது. கொள்ளை அடித்த நீரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கி உள்ளான்.

பதுங்கியுள்ள நீரவ் மோடியை இன்னும் பிடித்தபாடில்லை. ஏற்கனவே மக்கள் பணத்தை சூறையாடிய விஜய் மல்லையா, உல்லாசமாக இங்கிலாந்தில் சுற்றி வருகின்றனான். அவனை இந்தியா கொண்டு வர முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் உள்ளது. இவர்கள் திருடர்களுக்கு அரசாங்கம் நடத்துகிறார்களோ, இல்லை திருடர்களே அரசாங்கம் நடத்துகிறார்களா என்ற கேள்வி பிறக்கிறது. ஏன் என்றால் எந்த ஒரு நடவடிக்கையிலும் போதுமான முன்னேற்றம் இல்லை.

பல நுறு கோடி மக்களின் சேமிப்புகளை இப்படியாக தவறான மனிதர்களுக்கு கடனாக கொடுத்து, கொள்ளை அடிப்பதை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்பது போல வழக்கப்படி பிரதமர் வீராவேஷம் காட்டியுள்ளார். உங்கள் வேஷம் கலையும் வெளுக்கும் முன் உங்கள் வார்தைகளில் உண்மை உள்ளது என்பதை நிருபீயுங்கள் பிரதமரே.

[:]

You may also like...

Leave a Reply