[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

இந்த தொடர் கடவுள் யார்? எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்? நாம் எல்லாம் யார்? எங்கிருந்து வந்துள்ளோம்? எங்கு போகப்போகிறோம் என்ற விடைக்கு பல்வேறு அமைப்புகள், பல்வேறு வழி களை பல்வேறு மதங்கள் வாயிலாக சொல்லிக் கொண்டு வந்ததில் சிலவற்றைச் சொல்லியுள்ளோம். குறிப்பாக பக்தியைத் தாண்டி, தியானத்தால்தான் கடவுளை உணர முடியும் என்று பலரும் சொல்லியுள்ள நிலையில்.  பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்லாயம் கூட அதைத்தான் வலியுறுத்துகிறது.  இங்கு சொல்லப்படும் அடிப்படை ஞானம் கடவுள் யார்? எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்? நமக்கும், கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த உலகம், உலக சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் என்ன? அதில் நமது பாகம் என்ன?  என்பதைப் பற்றி ஒரு முழு அறிவைத் தருகிறது. இதில் பலருக்கு உடன்பாடும்,  சிலருக்கு  மாற்றுக் கருத்தும் இருக்க கூடும். எது எப்படியோ, இவ்வித்தியாலத்தின் ஞானத்தையும் உங்களுக்கு சொல்வதில் எனக்கு மகிழ்வே.

1936 ஆம்  ஆண்டு  தற்போது  பாகிஸ்தானாக இருக்கும் சிந்து ஹைதாராபாத்தில் வைர வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் திரு.லேக்ராஜ்.  அவரின்  உடலை ஆதாரமாக் கொண்டு பரமாத்மா சிவன் இந்த அரிய ஞானத்தை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதை அனுபவத்தில் உணர வேண்டிய விஷயம். 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு பிரிவினை ஆகும் சமயம், திரு. லேக்ராஜ் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபுமலைக்கு தனது அமைப்பின் இருப்பிடத்தை மாற்றி, அதுவே தற்போது இவ்வமைப்பின் தலைமையிடமாக உள்ளது.

உலக முழுமைக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்களை கொண்ட  இவ்வித்தியாலயம்,  ஐ.நா.வில் அரசு சார்பற்ற  நிறுவனமாக  அங்கம்  வகிக்கிறது.  இவ்வித்தியாலயத்தின் தலையாய நோக்கம் அமைதி வழியில் உலக மாற்றத்தை, புதிய உலகம் சத்தியுகத்தைக் கொண்டு வருவதாகும். அதற்கு இறைத் தந்தை பரமாத்மா சிவன் சொல்லித் தரும் இராஜயோகப் பயிற்சியும், அவரின் திவ்ய ஞானத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும், அவரின் இவ்ஞானத்தை உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்பதும், இந்ஞானத்தின்படி  வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இதன் மூலம் மனித நிலையில் இருந்து வருங்கால சத்தியுகத்தில் ஸ்ரீலெட்சுமி, ஸ்ரீநாரயணன் அவர்களின் இராஜ்யத்தில் தேவதையாக பிறக்கும் வாய்ப்பும், ஸ்ரீலெட்சுமி,  ஸ்ரீநாராயணனாகும்  வாய்ப்பும்  இருப்பதாக பரமாத்மா சிவன்  சொல்கிறார்.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply