[:en]எனது ஆன்மிகம் – 65 ஆர்.கே. [:]

[:en]ஆத்மாவாகிய நாம் நமது உண்மையான வீடான பரந்தாமத்தில் இருந்து,  இந்த உலக நாடக மேடையில் நடிக்க வருகிறோம் என்று பார்த்தோம். நமது தந்தை பரமாத்மா எங்கே இருக்கிறார். எப்போது வருகிறார். என்ன செய்கிறார் என்று பார்த்தோம்.  ஆத்மாவின் உண்மையான தன்மை என்ன. அதன் பாகங்கள் என்ன. அது எப்படி செயல்படுகிறது என்று பார்த்தோம்.

நாம் உடல் அல்ல ஆத்மா என்று பார்த்தோம். உடல் என்பது ஒரு ஆதாரம்.  உடல் அல்ல நாம். ஆனால் நாம்  இந்த உடல் உணர்விலே எப்போதும் இருக்கிறோம். இது உண்மைக்கு புறம்பானது என்கிறார் பரமாத்மா சிவன். எது உண்மைக்கு புறப்பானதோ, அதன் அடிப்படையில் நாம் வாழ்கின்றபோது,  செய்கின்ற செயல்களும் தவறானவையாக,  உண்மைக்கு புறம்பானதாக உள்ளது. ஆகையால் தான் இந்த உலகம் இன்று  அதன்   உச்சக் கட்டத்தில் உண்மைக்கு புறம்பான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே இந்த உலகம் காமம், கோபம், மோகம், பேராசை, அகங்காரம் என்ற ஐந்து தீய குணங்களால் நிரப்பட்டு உள்ளது என்கிறார் பரமாத்மா சிவன். இதற்கு காரணம் உங்கள் உடல் உணர்வே.  உடல்  என்று  நீங்கள் உங்களே நீங்களே நினைத்துக் கொண்டிருப்பதால், இத் தீய குணங்களின் தன்மை ஏற்படுகிறது.  இதன் வழியாக  தீய செயல்களை செய்கிறீர்கள்.  அதன் வழியாக அதன் பலன் உங்களுக்கு துக்கம்,  அமைதியின்மை,  தோல்வி,  பயம், பதட்டம் எல்லாம்  வருகின்றது என்கிறார்.

ஆக  நீங்கள் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஆதாரம் உங்களை நீங்களே ஆத்மா, நான் ஒளிப்புள்ளியாவன்,  நான் பரமாத்மா சிவனின் குழந்தை, அவரும் ஒளிப்புள்ளியானவர், நான் இந்த உலகம் என்ற நாடக மேடையில் நடிக்க வந்துள்ள ஒரு பாத்திரம் மட்டுமே. என்னுடைய உண்மையான வீடு பரந்தாமம் என்று உங்களுக்கு உணர்வுபூர்வமான நிலை வர வேண்டும். அதற்கு இந்த ஞானக் கருத்துக்களை உங்கள் வாழ்வியலில், உங்கள் எண்ணங்களில், செயல்களில் செயல்பாடாக கொண்டு வர வேண்டும் என்கிறார் பரமாத்மா.

ஆத்மாவின் உண்மை தன்மை அமைதி,  சுகம், அறிவு, ஞானம், பரோஉபகாரம், கருணை, மகிழ்ச்சி, அன்பு போன்ற அளவிட முடியாத நல்ல சக்திகளின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால் அவற்றின் கீற்றுகளைத்தான் நமது வாழ்வில் பார்க்கிறோமே தவிர, அவற்றின் முழு அனுபவம் நமக்கு ஏற்படுவதில்லை, காரணம் நாம் உடல் என்ற உணர்வில் இருந்து வருகிறோம். நமது எண்ணத்தில் நாம் யார் என்று நினைத்தால் நமது உடல் உருவமே ஞாபகத்திற்கு வருகிறது. அப்படி வருமேயானால், அது நாம் உடல் உணர்வில் இருப்பதாகத்தான் அர்த்தம். இந்த நிலை மாறி, உடலைப் பார்த்தாலும், அது ஒரு கருவி, ஆதாரம். நாம் உடல் அல்ல, அதை இயக்கும் கர்த்தா என்ற மனநிலை வரும் போது, உங்களில் மாற்றம் வியக்கத்தக்கதாக இருக்கும், இதற்கு பக்க பலமாக இருப்பது, இதற்கான அடிப்படை  சக்தியை தருவது பரமாத்மா சிவன் கற்றுக் கொடுக்கக் கூடிய இராஜயோகப் பயிற்சி.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *