[:en]எனது ஆன்மிகம் – 66 ஆர்.கே.[:]

Advertisements

[:en]பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சொல்லித் தரும் இராஜயோகப் பயிற்சி, பரமாத்மா சிவனால் இந்த உலக மக்களுக்கு சொல்லித் தரும் பயிற்சி. இதன் மூலம் உங்களை நீங்களே ஒளிமயமான ஒரு ஆத்மா என்ற உணர்வை பெறவும்,  ஒளிமயமான  பரமாத்மாவை  உணரவும் வழி ஏற்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் நமது முன்னோர்கள் தவங்களை செய்து, அதன் வழி முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளனர். உலகில் பல்வேறு தியான வழி முறைகள் உள்ளன.  அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்,  இது பாமரனும் கடைபிடிக்கக் கூடிய சகஜ இராஜயோகம். மிக எளிய முறையில் உங்களை உணர்தலுக்கு கொண்டு போகும் வழி முறைகளை பரமாத்மா சிவன் சொல்லித்  தருகிறார்.

சரி இராஜயோகப் பயிற்சி எதற்கு?  இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் அடைகிறது. உங்களின் இயல்பு நிலைக்கு நீங்கள் திரும்ப முடிகிறது. ஆத்மாவின் உணர்வை பெற முடிகிறது. எட்டு சக்திகள் உங்களுக்கு கிடைக்கிறது. இன்னும் பல்வேறு பலன்கள் உங்களுக்கு கிடைக்கிறது.

இந்த பயிற்சியை எதற்கு சிவன் சொல்லித் தருகிறார். பரமாத்மா சிவன் இதனை சொல்லித் தருவதற்கு காரணம், இது அவரின் கடமையாக உள்ளது. இதன் மூலமாகவே உங்களை அவர் அமைக்கும் புதிய உலகமான சத்தியயுகத்திற்கு உங்களை கூட்டிச் செல்ல முடியும். மிகக் கூடிய விரைவில் மாற்றத்தை சந்திக்கப் போகும் இந்த உலகம், அதற்கான ஆயத்தப் பணியில் மிக தீவிரமாக உள்ளது.

அமெரிக்கா,  வட கொரியா யுத்த  முஸ்தீபுகள்  மற்றும் வட சைனா கடல் பகுதி முற்றுகை.  நேட்டோ நாடுகள் படை இரஷ்ய எல்லையில் குவிப்பு.  அரபு தேசங்களில் மற்றும் அண்டை நாடுகளில் போர் பதட்டம். உலகமெங்கும் நடைபெறும் பயங்காரவாத  அச்சுறுத்தல்,  பொருளாதார சரிவு நிலை,  இயற்கை சீற்றங்கள் என்று பல்வேறு அச்சுறுத்தல்கள் புதிய உலக வருகையை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

இந்த புதிய உலகம் அமைதி வழியில், தியான சக்தியின் மூலம் படைப்பதாக பரமாத்மா சிவன் சொல்கிறார். இன்று பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தின் உறுப்பினர்களாக  5  லட்சத்திற்கும் அதிகமானவர்கள், இந்த தியான பயிற்சியை அனுதினமும்  செய்து வருகிறார்கள்.  இந்த தியான சக்தி பழைய உலகத்தை புதிய உலகமாக மாற்றும் வல்லமை பொருந்தியது, காரணம் பரமாத்மா சிவன் இவர்களை தனது ஆதாரங்களாக வைத்து அவர்களின் துய்மை மற்றம் தியான சக்தி மூலம் புதிய உலகத்தைப் படைக்கிறார்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply