[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

பரமாத்மா சிவன் உலக நாடகம் முடிவடையும் இந்த அரிய சங்கம யுகத்தில், இந்த கலியுகத்தின் இறுதியில் 1936 ஆம் ஆண்டு முதல் புதிய யுகம் சத்தியுகத்திற்கான,  மாற்றத்திற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார். இப்பணியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பிரம்மகுமார், குமாரிகள் என்றழைக்கப்படும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகிறார்கள். இப்பணியின் 80வது நிறைவு ஆண்டு சமீபத்தில் உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

பரமாத்மா சிவனின் இப்பணியில் உங்களையும் அன்போடு அழைக்கிறார். புதிய உலகத்தின் மாற்றத்திற்கான பணியில் பங்கேடுத்து,  உங்களின் பாக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் என்கிறார்.  அழைப்பை தவற விடாதீர்கள். இன்று நடைபெறும்  அரசியல் அவலங்களை மாற்ற பெரும் முயற்சிகளை பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். அதற்கான பலனை பெற்றார்களா என்றால் அது இன்னும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. காரணம் இப்பணி பரமாத்மாவின் பொறுப்பில் உள்ளது.  அவரின் பணி உலக அரசியலையே மாற்றும் பொறுப்பில் இருக்கிறார். ஆகையால் உள்ளுர் அரசியலைக் காட்டிலும், பரமாத்மாவின் உலக மாற்றத்திற்கான அரசியலில் பங்கெடுத்து,  முழு உலகமும் பரிசுத்தமான உலமாக மாற  உங்களின் உழைப்பு அவசியமாகிறது. இதை அனைவரும் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  விகாரமற்ற,  துய்மையான,  அமைதியான, சுகம் நிறைந்த, சந்தோஷமிக்க உலகத்தை அதாவது ஏடன் தோட்டத்தை மீண்டும் உருவாக்கும் பணியில் பரமாத்மா தனது 80 வருட உழைப்பை கொடுத்துவிட்டார். மீதி இருப்பதோ இன்னும் 20 வருடங்களே,  அதில் உங்களின் பங்களிப்பையும் அளிக்க பரமாத்மா சிவன்  அழைக்கிறார்.

கடவுள் துணிலும் இருக்கிறார்,  துரும்பிலும் இருக்கிறார். சகல  உயிர்களிலும்  இருக்கிறார் என்று சொல்லி,  அவரை இழிப்படுத்திவிட்டதாகவும்,  இது மாபெரும் பாவம் என்பதை முதல் முதலாக இந்த உலகத்திற்கு சிவன் சொல்கிறார். நீங்கள் எப்படி எல்லா இடத்திலும் இல்லையோ, அதே போல் நானும் தனித்த அடையாளத்துடன், பரமாத்மாவாக தனித்து இருக்கிறேனே தவிர, எல்லா உயிர்களிடத்திலும் இல்லை. ஆக அப்படிச் சொல்லி கணக்கை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்.  பக்தியில் துணியிலும் இருக்கிறார்,  துரும்பிலும் இருக்கிறார் என்று பாவனை பாடிக் கொண்டிருந்தோம்.  அதை விடுத்து இறைவன் யார்? எங்கே  இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எப்படி அவரை சந்திப்பது என்று பரமாத்மா சொல்லும் தெய்வீக ஞானத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply