[:en]காசநோயாளிகள் குறித்த தகவலை தெரிவிக்காவிட்டால் சிறை தண்டனை டாக்டர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை[:]

Advertisements

[:en]


காசநோயாளிகள் குறித்த தகவலை தெரிவிக்காவிட்டால் சிறை தண்டனை டாக்டர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

காசநோய் ஆபத்தான தொற்று நோய். மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலை விளைவிக்க கூடியது. இந்த நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது அவசியம். காசநோய்க்கு தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் டாக்டர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆய்வகங்கள், ரத்த பரிசோதனை மையங்களிடம் இருந்து காச நோயாளிகள் குறித்த விவரங்களை பொது சுகாதார மைய அலுவலர்கள் சேகரித்து வைக்க வேண்டும்.

2025–ம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். எனவே ஒருவருக்கு காச நோய் இருப்பது தெரிந்தால் உடனே உள்ளூர் காசநோய் சிறப்பு சுகாதார மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவலை தெரிவிக்காத டாக்டர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com