[:en]குளறுபடிகள் தான் நீட் தேர்வா?  –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

வேண்டாம் நீட் தேர்வு.  இது  தமிழக அரசியல் கட்சிகள்  நீட்டுக்காக போடும் கூப்பாடு. இது யார் காதிலும் விழவில்லை என்பது வேறு  கதை. ஆனால் நடக்க இருக்கும் நீட் தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது தேர்வை நடத்தும் சிபிஎஸ்சி தேர்வு குழு.

1 லட்சத்து ஏழாயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்  என்று தெரிந்தும். அதற்கான தேர்வு மையங்களை ஏற்பாடு செய்யாது பல மாநிலங்களுக்கும் மாணவர்களை சிதறி ஓடச் செய்தது அரசியலா? காழ்புணர்ச்சியா? இல்லை தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் உள்ளக் கொதிப்பாக இருக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு நாசகார திட்டங்களின் முகாமாக தமிழகத்தை தேர்வு செய்து, அதில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யும் வேளையில், மத்திய அரசின் ஆதரவு திட்டமான நீட்டில் தமிழக மக்களை வெறுப்படையச் செய்து, அதன் ஆதாயத்தை வெளிமாநில மக்களுக்கு கொடுக்க செய்யும் திட்டமா? என்பதும் கேள்வியாக உள்ளது.

இந்திய அளவில் அதிக இன்பராஸ்டெக்சர் உள்ள தமிழகத்தில் நீட் தேர்வு செய்ய இடம் கிடைக்கவில்லை என்று சிபிஎஸ்சி சொல்கிறது என்பதில் இருந்து, அவர்களின் உள்நோக்கம் பட்டவர்த்தனமாக தெரிகிறது. சின்ன குழந்தையும் இவர்கள் வாதத்தைக் கேட்டால் சிரிக்கும். ஆனால் உச்ச நீதிமன்றம் அவர்களின் வாதத்தை அனுமதித்து தேர்வு எழுது மாணவர்களை அலகழிக்கச் சொல்லியுள்ளது என்பதில் இருந்து ஒட்டு மொத்த நீதி துறையின் உச்சமும் என்ன நோக்கத்தில் செயல்படுகின்றது என்பதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர்.

அதிகாரத்தின் கடைசி காலத்தில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு, தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? இந்த மக்கள் வாக்களிப்பார்களா என்ற சந்தேகத்தில், முடிந்த மட்டும் நம் எதிராளிகளுக்கு சிரமத்தை கொடுத்து அற்ப சந்தோஷத்தை அடைந்து கொள்வோம் என்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை என்னவென்று சொல்வது. அவர்களின் பருப்பு தமிழகத்தில் இனி வேகாது, கடையை துக்கிக் கொண்டு போகவேண்டியது தான் என்பதை பாஜக புரிந்து கொண்டு விட்டது. மக்களின் எழுச்சி பாஜகவுக்கு எதிராக உள்ளதை, உளவு துறையின்  மூலம்  தெரிந்து கொண்ட மத்திய அரசு, அவர்களின் ஏவல் கூலிகள் மூலம் நடத்தும் நாடகங்களை, தமிழக மக்கள் எதிர் நடவடிக்கைகள், எதிர்ப்புகள்,  போரட்டங்கள் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு  செய்து வருவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.  இதன்  உச்சம் தான்  நீட் தேர்வில் குளறுபடிகள் என்பதையும்  சேர்த்துப்  பார்க்க வேண்டியுள்ளது.

இதைத் தவிர்த்து மத்திய இரயில்வேயில் வேலைவாய்புகளை வடமாநிலத்திற்கு ஒதுக்குவதில் இருந்தும், அவர்களை தென்மாநிலங்களுக்கு அனுப்புவதில் இருந்தும். அவர்கள் இன மோதலை உருவாக்க திட்டமிடுகிறார்கள் என்றே புரிகிறது.  இதில்  அவர்கள் என்றும் வெற்றி பெறப்போவதில்லை.  மேலும் இங்கு வெகுகாலமாக வணிகம் மற்றம் பிற நடவடிக்கைகளில் உள்ள வடமாநிலத்தினருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. இதன் நடவடிக்கைகள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. வடக்கே இருந்து களவாணிகளை தமிழக பகுதிகளைல் களமிறக்கிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி,  தமிழக மக்கள் அவர்களை தாக்குவதில் இருந்து  தொடங்கி  இருக்கிறது.

மத்திய ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் மாநில ஆட்சியாளர்களுக்கு தெரிந்தும் கையாலகாத நிலையில் இருப்பது தமிழகத்தின் தலையெழுத்தாக உள்ளது. உண்மையான அரசியல்வாதிகள் யார் என்பதை தேடும் வேளையில் தமிழக மக்கள் இறங்கி உள்ள வேளையில், குழப்பதை ஏற்படுத்த  வடமாநில குடியேற்றத்தையும் மறைமுகமாக தமிழகத்தில் மத்திய பாஜக ஏற்படுத்தி வருகிறது. அவர்களின் ஆதரவாளர்களை தமிழகத்தில் இடம் பெயரச் செய்வது, காவி ஆட்சியை காலுன்ற செய்ய செய்யப்படும் சூழ்ச்சி என்று இங்குள்ள தமிழ் தேசிய பற்றாளர்கள் பறை அறைந்து சொல்லி வருகின்றனர். இதில் மக்கள் அடிப்படை அரசியலை புரிந்து கொள்ளாமல் எந்த தீர்வையும் நாம் எட்ட முடியாது என்பதை எமது கருத்து.

[:de]குளறுபடிகள் தான் நீட் தேர்வா? – ஆர்.கே.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com