[:en]தீர்ப்பு வந்தாச்சு, காவிரி தண்ணீர் வருமா? –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

கர்நாடக தேர்தலால், காவிரிப் பிரச்னை ரப்பராக இழுபட்டு, இறுதியாக இறுதி வடிவம் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் பெற்றாகிவிட்டது.  அதன் படி  காவிரி  மேலாண்மை வாரியம் என்பது போய், காவிரி மேலாண்மை ஆணையம் என்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அதிகாரத்தின் படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமும், காவிரி நதி நீர் பங்கிடு முறைகளை அமல்படுத்துவதும், அதற்காக எந்த முடிவுகளையும் எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையீடு செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக 10 பேர் கொண்ட குழு  இம்மாத இறுதிக்குள் அமைத்திட வேண்டும் என்றும்,  உத்தரவை உடனடியாக அரசிதழிழ்  வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஏறக்குறைய தமிழகத்தின் எதிர்பார்பின்படி அமைந்துள்ளது.  இதில் எதிர்ப்போ அல்லது தடைகளேயோ ஏற்படுத்தும் சூழ்நிலை கர்நாடகத்தில் இல்லாதது மத்திய அரசுக்கு, இப்பிரச்னையை எளிதில் முடிவு செய்ய ஏதுவாக இருந்தது. காரணம் கர்நாடக தேர்தல் முடிவு அவர்களை காவிரி பிரச்னையில் முழு மூச்சாக கவனம் கொள்ள செய்ய முடியவில்லை.  ஆட்சிக் கட்டிலில் அமர போவது யார்? யாருக்கு முதல் உரிமை? யார், யாரோடு சேருவது என்ற குழப்பத்தில் காவிரியை கர்நாடகம் முழுவதுமாக கண்டு கொள்ளவில்லை.  அரசு செயலர் மற்றும் மாநில ஆளுநர் கீழே உள்ள கர்நாடக அரசு, மத்திய அரசின்  எண்ணங்களுக்கு உறுதுணையாக இருந்து, இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

கர்நாடக தேர்தல் வரை இப்பிரச்னையை இழுத்தடித்த மத்திய அரசு,  முடிவு  சாதகமாக இல்லை என்றவுடன், காவிரி பிரச்னையில் பின்வாங்கி விட்டது அல்லது அதை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது என கூறலாம். எது எப்படியோ 100 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

இனி தண்ணீர் வருமா? வரதா?  ஜுன்  மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதற்குள் ஆணையம் அமைக்கப்பட்டு, தண்ணீர் வருமா?  அதற்கு  தமிழக அரசு எத்தகைய அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுத்து வருகிறது? என்பது போன்ற கேள்விகள், தமிழக விவசாயிகள் மனதில் தொக்கி நிற்கின்றது.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  இதில்  மாநில அரசு விரைந்து அழுத்தங்களை கொடுக்க வேண்டும். காவிரி நதி நீர் ஆணையத்தை அமைக்க வேண்டிய பணிகளை உடன் செய்து முடிக்க,  மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று  கோரியுள்ளார்.

ஜல்லிக்கட்டை கொண்டு வந்தவர்களும் நாங்களே, அதேபோல் காவிரியை தமிழகத்திற்கு தந்தவர்களும் நாங்களே என்று பாஜக தமிழிசை முழங்கியுள்ளார்.  அதிமுக, திமுககளும்  இதில் தங்கள் பங்கும் உள்ளது என்று கூறி வருகின்றன.  மக்கள்  அறிவார்கள்  இதில் யார் யாருக்கு என்ன?  என்ன  பங்கு உள்ளது? உண்மையில் இதில் என்ன அரசியல் விளையாடியது, அதை நடத்தியவர்கள் யார்?  அதற்கு  துணை போனவர்கள் யார்? என்பதெல்லாம்  ஊர்  அறிந்த விஷயம்.

போகட்டும் எல்லாம்.  ஒரு வழியாக உத்தரவை பெற்றுவிட்டோம்.  இனி கர்நாடகம் வம்பு செய்யாது என்று நம்புவோம்.  அப்படி ஏதேனும் வம்புகளை அது செய்யுமேயானால்  தமிழகத்தின் தார்மீக முடிவுகள் எதுவானாலும் அது நமது பக்கத்தின் நியாயத்தையே உலகிற்கு சொல்லும் என்பது உண்மை.

[:]

You may also like...

Leave a Reply