[:en]துத்துகுடி ஜன(நாயக)ம் படுகொலை,  பதவி விலகுவாரா  முதல்வர்-?  –   ஆர்,கே.[:]

Advertisements

[:en]தமிழகம் காஷ்மீரா? என்று கேட்கும் அளவில்,  அரசு பயங்கர வாதம்  கட்டவிழுத்துவிடப்பட்டுள்ளது,  பட்டவர்த்தனமாக அம்பலமாகி உள்ளது.  சுற்றுசுழலை கெடுத்து வரும் ஸ்டெரிலைட்  ஆலையை  மூடும் விதமாக 100 நாட்களுக்கு  மேலான  அறவழிப்  போரட்டத்தில், ஜல்லிக்கட்டில் நடந்தது மாதிரி,  அரச பயங்கரவாதம் இறுதி நாட்களில் கட்டவிழுத்துவிடப்பட்டுள்ளது.

அரச பயங்கரவாதத்தில் 13 பேர்  பலியாகியுள்ளனர்.  இதற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரிக்கைகள் மக்களிடையே வலுத்து வருகிறது.  இது திட்டமிடப்பட்ட அரச வன்முறை,  மக்களுக்கு எதிரான இவ்வன்முறையை கண்ணடிக்காத  ஆள் இல்லை. இத்தகைய வன்முறையை, உயிரிழைப்பை ஏற்படுத்தியத்தற்க்கு கார்ப்பரேட் கொடுத்த கைக்கூலி காரணமா? என்று மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

கார்ப்பரேட் கைக்கூலிகளாக அரசு அதிகாரிகள்,  ஓய்வு பெற்ற  அதிகாரிகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  காசு ஆசை பிடித்த  தரங்கெட்ட கைலிகளின் மேற்பார்வையில் இப்படுகொலைகள் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.  அரசு  ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷனை வைத்து போலியான விசாரணை அறிக்கையை கொடுக்க சொல்லியிருக்கும் என்று மக்கள்,  அரசு நீதிவிசாரணை மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். சிபிஐ மூலமாக இப்படுகொலைக்கு காரணமானவர்களை அடையாளங்கான வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

போராட்டம்  என்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள  அடிப்படை  உரிமை.  இதை  அடக்கும் விதமாக ஜனநாயக படுகொலைகளும்,  அச்சுறுத்தல்களும் தொடர்ந்து துத்துகுடியில் அரங்கேறி வருகிறது.  அங்கு மக்கள் அச்ச சூழ்நிலையில் வாழ தள்ளப்பட்டுள்ளனர். இது காஷ்மீரில் நடக்கும் அடுக்க முறைக்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது.   தமிழக முதல்வர்  எடப்பாடி,  உண்மைக்கு  புறம்பாக  பேசி வருவது வன்மையாக கண்டிக்கதக்கது.

தற்காப்புக்காகத்தான் பேலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று கூறுவது அம்மக்களை இன்னும் இழிவு படுத்துவதாக உள்ளது. போலீசாரின் தற்காப்புக்காக 13 பேரை சூடப்பபட்டனர் என்பது பொருந்தாத விளக்கமாக உள்ளது.

இது அப்பட்டமான படுகொலை என்பதை,  ஊரறிய  நடத்திவிட்டு, சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது  ஆளும் அதிமுக அரசு.  துத்துகுடியில் இயல்பு  நிலை திரும்ப வேண்டும் என்றால்,  இப்படுகொலைகளுக்கு பொறுப்பேற்று  முதல்வர்  பதவியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.  மத்திய அரசுகளின் எடுபிடி அரசாக மாநில அரசு செயல்பட்டு வருவது பட்டவர்த்னமாக மக்கள் அனைவரும்  அறிந்துள்ளனர்.

அடக்கு முறைகளால் மக்களை ஒடுக்க முடியும் என்று எண்ணினால், அதைப்போல ஒரு முட்டாள் தனம் எதுவும் இந்த உலகில் இருக்க முடியாது. அடக்குமுறைகள் தற்காலிக விஷமாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வை தராது.  நிரந்தர  தீர்வை  தர வேண்டுமெனில்,  பிரச்னைக்கு காரணமான ஸ்டெரிலைட்  ஆலையை உடன் மூட  உத்தரவிட வேண்டும்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயமான நிவாரணங்களை அரசு செய்ய வேண்டும்.  அங்கு பொது அமைதி நிலவ,  அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் ஒத்துழைப்போடு ஒரு சமாதான முயற்சிகளை செய்ய வேண்டும். இதை தவிர்த்து வேறு எந்த முயற்சிகளும் தோல்வியைத் தரும். எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  இதை அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட கலவரம், ஒட்டு மொத்த தமிழகத்தின் கலவரமாக மாறாமல் மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மக்களுக்காகத்தான் ஜனநாயகத்தில் மக்கள் அரசு ஏற்படுத்தப்படுகிறது.  மக்களுக்கு எதிராக இருக்குமேயானால்,  அது மக்கள் புரட்சியால் துக்கி எறியப்படும் என்பதற்கு துத்துக்குடி ஒரு  உதாரணம்.

[:]

You may also like...

Leave a Reply