[:en]சமூக விரோதிகள் – பொறுப்புகளை தட்டிக் கழிக்க புது யுக்தி —– ஆர்.கே.[:]

Advertisements

[:en]

சமீப காலமாக தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும், அதற்கு காரணம் சமூக விரோதிகள் என்ற கூப்பாடு ஆட்சியாளர்களிடமும், அரசியல் வாதிகளிடம் பெருகி வருவதை காண்கிறோம்.

ஜல்லிக்கட்டில் போராட்டத்தில் தொடங்கிய சமூக விரோதிகள் டேக், நியூட்ரினோ, கதிராமங்கலம், நெடுவாசல் என்று தொடர்ந்து தற்போது துத்துக்குடியில் முடிந்துள்ளது. துத்துக்குடிக்கும் மற்றவைகளுக்கும் இடையில் உள்ள வித்தியாயம் அரச பயங்கரவாதத்தின் உச்சத்தை துத்துக்குடியில் பார்க்க முடிந்தது தவிர, மற்ற டிசைன் எல்லாம் ஒன்றாக இருந்தது என்பதே.

அரசு போரட்டக்காரர்களை கலைக்க வேண்டும், போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு உபயோகப்படுத்தும் வார்த்தை சமூக விரோதிகள் ஊடுறுவிவிட்டனர் என்பதே. சமூக விரோதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தார்களா? இல்லை அண்டை, அயல் தேசத்தில் இருந்து வந்தார்களா? யார் அவர்கள் என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துவிட்டு, பிரச்னையின் போது அவர்கள் வந்துவிட்டார்கள், இவர்கள் வந்து விட்டார்கள் என்று பொய் கதை விடுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒட்டு மொத்தமாக போரட்டக்காரர்களை ஒடுக்குவது, அவர்களை அச்சுறுத்துவற்கு சொல்லப்படும் வார்த்தைகள் சமூக விரோதிகள். மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக போராடுபவர்களை இப்படி போனவர், வந்தவர் எல்லாம் கொச்சைப் படுத்துவதை எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் நடிகனாக துத்துக்குடி மக்களை காண செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கு சென்று அதிமுக அரசின் ஊதுகுழலாக நடிகர் ரஜினிகாந்த் ஊதி பெருக்கிய வார்த்தை மீண்டும் சமூக விரோதிகள். இவர்கள் ஒன்று போல் சொல்வதை பார்க்கும் போது, இவர்கள் ஏதோ திட்டமிட்டு இப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதும், அதன் பலாபலன்களை ஆளும் வர்கத்திற்கும், வியாபார வர்கத்திற்கும் அர்பணிக்கும் நடவடிக்கையாகவுமே பார்க்க முடிகிறது.

13 பேர் பலியாகி 15 நாட்கள் ஆக போகிறது. இன்னும் முதல்வர் துத்துக்குடி செல்லவில்லை. இல்லை செல்ல விரும்பிவில்லை அல்லது அவர் அங்கு செல்ல யார் தடையோ இருக்கிறது? என்று நமக்கு ஏகப்பட்ட கேள்விகள் வருகிறது. பக்கத்து மாநிலம் சுட்டுக் கொன்றாலும் கேட்க நாதியில்லை. சொந்த மாநிலம் சுட்டுக் கொன்றாலும் கேட்க துப்பில்லை என்றால், மக்கள் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்பது தான் நிதர்சனம்.

ஆளும் அரசு மக்கள் பிரச்னைகளை உணர்ந்து, அதற்கு அதரவாக நடவடிக்கைகளை செய்யாவிடில், அவர்கள் அரசியல் செய்ய முடியாது என்ற காலம் பிறந்து விட்டது. சமூக வலைத்தளங்களில், டிவி மீடியாக்களின் காலத்தில், இவர்களின் அட்டூழியங்கள், அலட்சியங்கள் நாள்தோறும் அரங்கேறி வரும்போது, ஒழுங்கான ஜனநாயகவாதியாக, உண்மை அரசியல்வாதியாக நடந்து கொள்வதை தவிர, இனி வழியில்லை. இவர்கள் பப்பு வேகாது என்ற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வை பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

ஆக மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை விட்டு விட்டு, அவர்களின பிரச்னைகளுக்கு அவர்களோடு சேர்ந்து தீர்வு காண வாருங்கள். இல்லையேல் அவர்களால் தண்டிக்கப்படும் காலம் விரைவில் வரும்.

கலைத்துறையினர் ஆளும் வர்க்கத்தின் அடிப்பொடியாக மாறாமல், உங்களின் சொந்த கருத்துக்களைச் சொல்லுங்கள். அப்படி இல்லாமல், ஆளும் வர்கத்தின் பொம்மலாட்ட பொம்மையாக, அவர்களின் ஆட்டத்திற்கு ஆடுவீர்களேயானால், உங்களை மக்கள் புறம் தள்ளும் காலமும் இதுவே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள். எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். அது தொடர்ந்து நடந்தால், பிறகு நீங்கள் நாடாள, நாடென்று ஒன்றும் இருக்காது.

[:de]சமூக விரோதிகள் – பொறுப்புகளை தட்டிக் கழிக்க புது யுக்தி —– ஆர்.கே.

[:]

You may also like...

Leave a Reply