[:en]நற்சிந்தனை[:]

[:en]

 

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்:

சந்தோஷத்தின் போஷாக்கு ஒருவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உண்மையாக சந்தோஷத்துடன் இருப்பது என்பது, சந்தோஷத்திற்காக வெளித் தூண்டுதலை சார்ந்திருக்காமல், உள்ளிருக்கும் சந்தோஷத்தை கண்டுபிடிப்பதில் உள்ளது. உள்ளார்ந்த சந்தோஷத்தின் தொடர்பில் இருக்கின்ற ஒருவரால், அவருடைய வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடிகின்றது. சந்தோஷம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது – நாம் சந்தோஷமாக இருக்கும்போது, உடலை பாதிக்கின்ற நோய்களிலிருந்தும் கூட நாம் விடுபட்டு இருக்கின்றோம்.

செயல்முறை:

நான் என்னுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தின் நிலையை பேணிக்காக்கும்போது, என்னால் அனைத்திலும் உள்ள அழகை ரசிக்க முடிகின்றது. இம்மன நிலையால் என்னுடைய மனம், உடல் மற்றும் உறவுகள் ஆரோக்கியமாக உள்ளன. என்னால் நான் செய்கின்ற அனைத்தையும் ரசிக்க முடிவதோடு தொடர்ந்து முன்னேற்றத்தையும் அனுபவம் செய்ய முடிகின்றது.


[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *