[:en]நற்சிந்தனை[:]

Advertisements

[:en]

இன்றைய சிந்தனைக்கு

பற்றற்றதன்மை:

பற்றற்று இருக்கும் ஒருவருக்கு சவால்கள் கூட விளையாட்டாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பற்றற்று இருக்கும்போது, நாம் சூழ்நிலையில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதில்லை. பற்றற்றதன்மை, சிரமமான சூழ்நிலையில் நிலைகலங்குவதை அல்லது குழப்பமடைவதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதற்கு நமக்கு உதவுகின்றது. எவ்விதமான சூழ்நிலையையும், எவ்வளவு சிரமமாக இருப்பினும், ஒரு விளையாட்டை கவனிப்பதை போன்றே நாம் கவனிப்பதற்கு நமக்கு சக்தி அளிக்கின்றது.

செயல்முறை:

நான் ஆதரவின்றி உணரும் எந்தவொரு சூழ்நிலையிலும், நான் பற்றற்று இருக்கும் சக்தியை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். நான் சூழ்நிலையை, ஒரு நாடகத்தை பார்ப்பதை போல பார்ப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும். அதன்பிறகு நான் கதையில் நிகழ்கின்ற வெவ்வேறான காட்சிகளை பார்க்கும்போது நான் லேசாக உணர்வதோடு, என்னால் இரசிக்கவும் முடிகின்றது. நான் இருக்கின்ற சூழ்நிலைகளில் நான் சிக்கிக்கொண்டிருப்பதாக இப்போது உணரவில்லை; மாறாக, அவற்றை என்னால் அறிவுபூர்வமாக அணுக முடிகின்றது.[:]

You may also like...

Leave a Reply