[:en]நற்சிந்தனை[:]

Advertisements

[:en]

இன்றைய சிந்தனைக்கு

வளைந்து கொடுக்கும்தன்மை:

அன்பாலும், பணிவாலும், வளைந்து கொடுக்கும்தன்மை இயற்கையாகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

வளைந்து கொடுப்பவராக இருக்கவேண்டுமானால், நாம் பணிவுத்தன்மை என்ற நற்குணத்தை கொண்டிருப்பது அவசியமாகும். பணிவுத்தன்மையால், நம்மை சுற்றியுள்ளவர்களையும், அவர்களுடைய நடத்தையையும் புரிந்துகொள்ள நாம் விருப்பமுடையவர் ஆகின்றோம். புரிந்துணர்வு அன்பை கொண்டுவருகின்றது. நாம் ஒருவரை நேசிக்க கற்றுக்கொள்ளும்போது, நாம் தன்னிச்சையாகவே வளைந்துகொடுப்பவராக ஆகுவதோடு, அவர்களை அவர்கள் உள்ளவாறே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

செயல்முறை:

ஒத்துழைக்காத ஒருவரை நான் சந்திக்க நேரிடும்போது, நான் பணிவுடையவராகி, வார்த்தைகளால் இல்லாவிட்டாலும், அவருடைய செயல்களின் மூலமாக அவர் தெரிவிப்பதை புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமாகும். அன்புடனும் புரிந்துணர்வுடனும் என்னால் கேட்க முடியும்போது, நான் மேற்கொண்டு விறைப்பாக இருப்பதற்கு மாறாக, வளைந்து கொடுத்து என்னால் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவு கொடுக்க முடிகின்றது.

 [:]

You may also like...

Leave a Reply