[:en]18  எம்.எல்.ஏக்கள்  நீதிமன்ற  தீர்ப்பு –  மக்கள்  தீர்ப்பு  தள்ளி வைப்பு  –  ஆர்.கே.[:]

[:en]

கடந்த செம்டம்பர் மாதம் 18 ம் தேதி டிடிவி  ஆதரவு அதிமுக எல்எல்ஏக்கள் 18 பேர்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக  பல குறைகளைச்  சொல்லி,  அவரை மாற்ற வேண்டும், தங்கள் ஆதரவு அவருக்கு கிடையாது என்றும் கவர்னர் பன்வாரிலால்  புரோஹித்தை  சந்தித்து முறையிட்டனர்.

இது குறித்து  அதிமுக  கொறடா  சபாநாயகரிடம்,  இவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டையும், கொறடா உத்தரவுக்கு மீறியும் செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று  புகார்  செய்ய, 18  டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்  தகுதி  நீக்கம்  செய்யப்படுகின்றனர்.

இதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தை நாட, வழக்கு விசாரணை நடைபெற்று ஜனவரி  மாதம்  இவ்வழக்கு விசாரணை முடிவுற்று,  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இத் தீர்ப்பு இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாண்புமிகு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மாண்புமிகு  நீதிபதி  சுந்தர்   ஆகியோர்  தீர்ப்பை வாசித்தனர்.

தலைமை நீதிபதி இவ்வழக்கில் சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும்,  நீதிபதி சுந்தர்  சபாநாயகர் வழக்கிய தீர்ப்பு செல்லாது என்றும், இரு மாறுபட்ட  தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த  9  மாதங்களாக  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்ககள்  பதவி பறிப்பு இன்றும் அப்படியே உள்ளது. என்றும் இவ்வழக்கு மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளதால் 3 வது  நீதிபதியின்  தீர்ப்புக்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி சொல்லியுள்ளார்.

இதன் மூலம்  18  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தகுதி நீக்கமும் நீடிக்கிறது.  இதனால்  மக்கள்  எதிர்பார்த்த  முடிவு  எதுவும் வரவில்லை என்பதே  நிதர்சனம்.  இப்படியாக ஒரு தீர்ப்பு வந்துள்ளதால், இது விரைவில் முடிவுக்கு வர விரைவில் வழக்கை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. காரணம் 18 தொகுதிகளின் நலன்கள் கடந்த 9 மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இது  ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு.   தீர்ப்பு வருவதற்கு  முன்பாக  பல்வேறு  அரசியல் மாற்றத்திற்கான கருத்துக்கள்  முன் வைக்கப்பட்டது.  குறிப்பாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், வருகின்ற 21 ம்  தேதிக்குள்  இந்த எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.  டிடிவி தினகரனோ தொடந்து  18 எம்எல்ஏக்கள் தீர்ப்புக்குப் பின் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும்  அல்லது  ஆட்சி மாற்றம்  ஏற்படும் என்று கூறினார்.

ஆனால் நடந்ததோ  இருவரின் கருத்துக்களுக்கு மாற்றாக, எடப்பாடி ஆட்சிக்கு இன்னும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி தீர்ப்புக்குப் பின்பே இவர்களின் கருத்து எது உண்மையாக ஆகிறது அல்லது இந்த அரசு தொடர்ந்து நீடிக்குமா? என்று சொல்ல முடியும். தீர்ப்புக்கு பின் டிடிவி கூறிய கருத்தில் இன்னும் இரண்டு மாதங்கள் நீதிமன்றம் இந்த ஆட்சிக்கு கால நீட்டிப்பு  செய்துள்ளது என்று கூறினார்.

இப்படியாக பரபரப்பாக பலராலும், குறிப்பாக தமிழக ஆட்சி மாற்றங்களுக்கு அடிகோலும் இந்த தீர்ப்பு மாறுபட்ட இரு நீதிபதிகளின் தீர்ப்பால் தள்ளிப்போயி உள்ளது. இது ஜனநாயக கடமைகளை செய்ய காத்திருக்கும் 18 எம்எல்ஏக்களுக்கு,  மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். அதே சமயம் சபாநாயகர் எடுத்த முடிவு செல்லும் என்று சொல்லி இருந்தால் இடைத்தேர்தல் வந்து அந்த தொகுதிக்கு பிரநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதோடு, ஆளும் அதிமுக அரசின் செல்வாக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அல்லது அதன் ஆயுள் காலம் முடிவுக்கும் வந்திருக்கும். எதுவும் நடக்காமல் இரண்டு மாத காலம் மட்டுமே தள்ளிச் செல்கிறது. ஒரு மைனாரிட்டி  ஆட்சி என்று சொல்லப்படும் அதிமுக அரசு தனது மெஜாரிட்டியை நிரூப்பித்து காட்டி,  தொடர்ந்து ஆட்சி செய்ய கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும்.  ஆக எல்லோருக்கும்  ஒரு  ஏமாற்றமே  மிஞ்சியதாக கருதப்படுகிறது. கூடிய விரைவில் 3 வது நீதிபதி இதற்கு நல்ல முடிவை  சொல்ல  வேண்டும்.

[:de]18 எம்.எல்.ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் தீர்ப்பு தள்ளி வைப்பு – ஆர்.கே.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *