Advertisements

[:en] 

 

 

 

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்:

சவாலான சூழ்நிலைகளின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதென்றால் தொடர்ந்து சந்தோஷமாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சிரமமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கும்போது நம்முடைய உள்ளார்ந்த சந்தோஷ நிலையை இழக்க கூடியவர்களாக நாம் இருக்கின்றோம். நாம் எதிர்நோக்குகின்ற சூழ்நிலைகளை கையாளுவதற்கு நம்மிடம் வளங்கள் இல்லாதபோது, பலவீனமானவர்களாக நம்மை பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். நம்முடைய மனநிலை, எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள் எதிர்மறையாக ஆகுவதோடு சூழ்நிலையின் எதிர்மறையானவற்றின் மேல் நாம் குற்றம் சாட்டுகின்றோம்.

செயல்முறை:

நான் எவ்விதமான சூழ்நிலையில் இருப்பினும் என்னால் என்னுடைய உள்ளார்ந்த சந்தோஷத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். கடினமான சூழ்நிலைகள் என்னை வலிமையாகவும் நிலையாகவும் ஆக்குவதற்காகவே தோன்றியுள்ளன. நான் என்னுடைய உள்ளார்ந்த வலிமையை அறிந்துகொண்டு, அனுபவம் செய்வதற்கு முயற்சி செய்வது அவசியமாகும். அதனால், சூழ்நிலைகள் என்னுடைய மனநிலையை தற்காலிகமாகக் கூட மாற்றாது. அதன்பிறகு, நான் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து சந்தோஷமாக வாழ்வேன்.

 [:]

You may also like...

Leave a Reply