[:en]நற்சிந்தனை[:]

[:en]

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பது:

மற்றவர்கள் தங்களுடைய திறமைகளை அறிந்துகொள்வதற்கு உதவி செய்வதே நாம் கொடுக்கக்கூடிய சிறப்பான உதவியாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், மக்கள் தங்களுடைய திறமைகளை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர் அல்லது அவற்றை பயன்படுத்துவதற்கு அச்சம் கொள்கின்றனர். ஆனால், நமக்கு கொடுக்கப்பட்ட திறமைகளை நாம் பயன்படுத்தவில்லை என்றால், நம்மால் எப்பொழுதுமே உண்மையான சந்தோஷத்தில் இருக்க முடியாது. நம்முடைய வாழ்க்கை முழுவதும், நாம் வளர்வதற்கு மக்கள் உதவுகின்றார்கள். நாம் முதுமை அடையும்போது, நாமும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என அறிகின்றோம்.

செயல்முறை:

மற்றவர்களை அவர்கள் சிறப்பாக செய்கின்ற காரியங்களை அறிந்துகொள்ள செய்வதோடு, சூட்சுமமாக அவர்களுடைய திறமைகளை பயன்படுத்துவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதே அவர்கள் முன்னேறுவதற்கான சிறப்பான வழியாகும். அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நான் பற்றற்று இருப்பதால், குறிக்கோளுடன் இருப்பதற்கும், ஆக்கபூர்வமான அறிவுரை வழங்குவதற்கும் எனக்கு சுலபமாக உள்ளது. அவர்களுக்கு உதவியதற்காக நான் எந்த வெகுமதியையும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்களுடைய திறமைகள் மலர்வதில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து இரசிக்கின்றேன்.



நன்றி ….  பிரம்மகுமாரிகள்   அமைப்பு[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *