[:en]நற்சிந்தனை[:]

Advertisements

[:en]

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

சூழ்நிலைகள் சிறப்பாக மாறும் என நம்பிக்கையுடன் இருப்பது வாழ்க்கை கொண்டுவருகின்ற எதனையும் ரசிப்பதற்கு வழிவகுக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் கடினமாக தென்படுகின்ற பல்வேறு சூழ்நிலைகளை நாள் முழுவதும் சந்திக்கின்றோம். ஆனால் அனைத்தும் ஒரு காரணத்திற்காகவே நடக்கின்றது என நாம் நம்பிக்கையுடன் இருக்கும்போது, நம்மால் ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷமாக இருக்க முடியும். சூழ்நிலைகள் சிறப்பாக மாறும் என நாம் நம்பும்போது, நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் எதையாவது நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியும். மேலும் நம்முடைய தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.

செயல்முறை:

நாள் முழுதும் எது தவறாக சென்றது எனவும், நான் செய்த தவறுகளிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் என ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ஆழமாக சிந்திப்பது நல்ல பழக்கமாகும். நான் ஏதாவது கற்றுக்கொண்டுள்ளேன் என்பதை நான் உறுதிபடுத்தும்போது, நடந்தவை அனைத்தும் என்னுடைய சொந்த நன்மைக்காகவே என்பதை புரிந்துகொள்வேன்.


[:]

You may also like...

Leave a Reply