[:en]நற்சிந்தனை – நம்பிக்கை[:]

Advertisements

[:en]

 

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

நம்பிக்கையடன் இருப்பவரே எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் நம்பிக்கையுடன் இருக்கும்போது, நம்முடைய ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயலில் சந்தோஷம் தென்படுகின்றது. நம்முடைய வழியில் எந்தவிதமான தடைகள் வந்தாலும், சுய நம்பிக்கையானது அவற்றை சந்திப்பதற்கு நம்பிக்கையை கொண்டுவருகின்றது. நம்பிக்கையானது சூழ்நிலைகளை தெளிவாக பார்பதற்கு உதவுகிறது. நம்மால் பிரச்சனையை வெற்றிகொள்ள முடியும் என நாம் நம்புவதால், எதிர்மறையான விளைவுகள் சூழ்நிலையை மோசமாக்க அனுமதிப்பதை காட்டிலும், உண்மையாகவே சூழ்நிலைகளை உள்ளவாறே பார்க்கின்றோம். இது, நாம் எந்த விஷயத்தை அணுக வேண்டி இருந்தாலும், நாம் சந்தோஷமாக இருப்பதற்கு உதவும்.

செயல்முறை:

நான் எந்த காரியத்தை எடுத்துக்கொண்டாலும், நான் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நான் வெற்றி அடைவேன் என என்னுள் நினைவு செய்வது அவசியமாகும். இந்த தொடர்ச்சியான நினைவூட்டல் என்னுடைய நம்பிக்கையை தொடர்ந்து பலப்படுத்துவதோடு, நான் சந்தோஷத்துடன் முன்னோக்கி செல்கின்றேன்.


[:]

You may also like...

Leave a Reply