நற்சிந்தனை – சந்தோஷம்

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

சந்தோஷம்:

ஒருவருக்குள் இருக்கும் சந்தோஷம் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளை நம்பிக்கையுள்ளதாக மாற்றுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சந்தோஷம் சக்திமிக்கது. அது நம்முடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவலாம். மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளிலும் கூட, நம்முடைய உள்ளார்ந்த சந்தோஷம் நம்மை நம்பிக்கையுடையவராக உணர வைக்க முடியும். இப்பொழுது நாம் எந்த சூழ்நிலையில் இருப்பதை நாம் பார்த்தாலும், நம்மால் உள்ளார்ந்த சந்தோஷத்தை பேணிக்காக்க முடியும்போது சூழ்நிலைகள் சிறப்பாக மாறுவதை நாம் காணலாம்.

செயல்முறை:

இன்று, நான் என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இல்லாத ஒரு சூழ்நிலையில் கவனம் செலுத்துவேன். சூழ்நிலை மாறவேண்டும் என எதிர்பார்க்காமல், அவற்றை அவை உள்ளது போலவே ஏற்றுக்கொள்வதற்கு நான் கற்றுக்கொள்வது அவசியமாகும். இவ்வாறு ஏற்றுக்கொள்வது சூழ்நிலைகள் சிறப்பான முறையில் நடக்கின்றது என்ற நம்பிக்கையை எனக்கு கொடுக்கும். இந்த நம்பிக்கையினால், மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலை கூட நேர்மறையாக மாறும்.

 

You may also like...

Leave a Reply