நற்சிந்தனை – பணிவுத்தன்மை

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை:

பணிவுத்தன்மை கற்றலை கொண்டுவருகின்றது. இதன் மூலமாக முன்னேற்றம் வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பணிவுத்தன்மை இருக்குமிடத்தில், கற்பதற்கான விருப்பம் இருக்கிறது. பணிவுத்தன்மை இல்லாதபோது அகங்காரம் வருவதோடு, சூழ்நிலையிடமிருந்தோ அல்லது நம்மை சுற்றி உள்ளவர்களிடமிருந்தோ நாம் கற்றுக்கொள்வதை இது தடுத்து விடுகின்றது. பணிவுத்தன்மையின் சக்தியானது கற்பதற்கும் தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கும் நம்மை ஆயத்தப்படுத்துகின்றது.

செயல்முறை:

சில சமயங்களில், ஏதாவது ஒரு காரணத்தினால் காரியங்கள் தவறாக போகின்றன: நாம் கற்க வேண்டிய பாடம் இருக்கிறது. ஏதாவது தவறாக நடக்கும்போது, அவற்றிலிருந்து என்னால் என்ன கற்றுக்கொள்ள முடியும் என பார்ப்பது அவசியமாகும். இதை நான் புரிந்து கொள்ளும்போது, நான் பணிவுத்தன்மை உடையவராக ஆகுவேன். என்னுடைய பணிவுத்தன்மை, நான் ஒருபொழுதும் ஆணவமிக்கவராக ஆகி விடாமல் இருப்பதையும் எப்பொழுதுமே கற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன் என்பதையும் உறுதி செய்ய உதவுகின்றது.

 

You may also like...

Leave a Reply