நற்சிந்தனை – பெருந்தன்மை

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

பெருந்தன்மை:

அதிர்ஷ்டத்தின் பலனை தாராளமனதுடன் அனைவருக்கும் கொடுப்பதில் சந்தோஷம் இருக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான பரிசுகளாலும் திறமைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டுளோம். நாம் எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் என புரிந்துகொண்டு அதிகமாக பாராட்டும்போது, நாம் நம்முடைய குறிப்பிட்ட அதிர்ஷ்டத்தை மற்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்வதை இரசிப்போம். நாம் எதை பகிர்ந்துக்கொண்டாலும் அது எப்பொழுதும் நம்மிடம் திரும்பி வரும். அதனால் நம்முடைய அதிர்ஷ்டம் அதிகரிக்கின்றது.

செயல்முறை:

என்னிடம் அதிகமாக இருந்திருக்கலாம் அல்லது எனக்கு இன்னும் சிறந்தவை வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக, நான் அதிர்ஷ்டத்துடன் இருக்கின்ற அனைத்து விஷயங்களையும் எனக்கு நானே நினைவு படுத்திக்கொள்வது அவசியமாகும். எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதை நான் பாராட்ட ஆரம்பிக்கும்போது, என்னிடம் உள்ளவற்றை என்னால் சிறப்பாக பயன்படுத்த முடியும். இது என்னுடைய அதிர்ஷ்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்தகொள்ள கற்பதும் ஆகும். இதை செய்யும்போது என்னுடைய ஆசீர்வாதங்கள் இயற்கையாக அதிகரிப்பதை நான் காண்பேன்.

 

You may also like...

Leave a Reply