நற்சிந்தனை – பொறுமை

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை:

பொறுமை என்பது பற்றற்று கவனிப்பதை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அநேகமான சூழ்நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்ற காரியங்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாதபோது, நாம் பற்றற்றதன்மையுடன் கவனிப்பது அவசியமாகும். பற்றற்றதன்மை பொறுமையாக காத்திருப்பதற்கு நமக்கு சக்தியை கொடுக்கின்றது. அச்சமயத்தில் பொறுமையானது கடினமான சூழ்நிலையின்போது குழந்தையின் அருகாமையில் இருந்து அடைக்கலம் அளிக்கின்ற ஒரு பாதுகாப்பான தாயைப்போல இருக்கிறது.

செயல்முறை:

காரியங்கள் சிறப்பாக நடக்காதபோது, என்னால் எதுவும் செய்ய இயலாத சூழ்நிலையில், என்னால் காத்திருக்க மட்டுமே முடியும் என எனக்கு நானே நினைவு செய்துகொள்வது அவசியமாகும். பொறுமையானது புயல் கடந்து செல்ல, என்னை காத்திருக்க அனுமதிக்கின்றது. நம்பிக்கையானது சூழ்நிலை சிறப்பாக மாறும் என்று நான் நம்புவதை பற்றிக்கொள்ள உதவி செய்கின்றது – இறுதியில் மேகங்கள் எப்பொழுதும் கலைந்துவிடும்.

 

You may also like...

Leave a Reply