நற்சிந்தனை – பொறுப்பு
இன்றைய சிந்தனைக்கு
பொறுப்பு:
விடுபட்டு இருப்பவரே பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுகின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் பொறுப்பேற்றுள்ள காரியத்தில், அனைத்தையும் நாமே சொந்தமாக செய்ய முயற்சிப்பதற்கு வலியுறுத்துவதோடு, அக்காரியத்தில் மிக அதிகமாக நம்மை ஈடுபடுத்திகொள்வது சுலபமான ஒன்றாகும். இது மென்மேலும் நம்மை மனஅழுத்தமுடையவராக ஆகுவதற்கு வழிவகுப்பதோடு, காரியத்தை பற்றி கவலையடைய செய்து, நம்மால் முடிந்தளவு சிறப்பாக அக்காரியத்தை செய்வதிலிருந்து நம்மை தடுத்துவிடுகின்றது.
செயல்முறை:
நான் புதிதாக ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்றுக்கொள்ளும்போது, அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வேன் என என்னுள் கூறிக்கொள்வது அவசியமாகும். அதன்பின்னர் நான் பற்றற்றவன் ஆகவேண்டும். அதன்பின்னர், காரியத்தை பகிர்ந்தளிப்பது சுலபமாக இருப்பதை நான் காண்பேன் . எதிர்பார்ப்புகள் இல்லாததால் நான் சிறப்பாக செய்துகொண்டிருப்பதை நான் காண்பேன்.