நற்சிந்தனை – களைப்பற்றதன்மை

இன்றைய சிந்தனைக்கு

களைப்பற்றதன்மை:

களைப்பற்று இருப்பவரே தன்னிடமும் மற்றவர்களிடமும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நிதானமாக பணியாற்றுகின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

காரியங்கள் தவறாக போகும்போது, களைப்பற்றதன்மை, குற்றம் சாட்டாமல் மாற்றம் கொண்டுவருவதற்கு என்னை பணியாற்றத் தூண்டுகின்றது. அடித்தளத்தை உருவாக்குவதற்கு செங்கற்களை நாம் அடுக்கும்போது, உண்மையான வேலையை ஒருவரும் கவனிப்பதில்லை ஆனால், அக்காரியத்தின் முடிவு தானாகவே பேசுவதை போன்றதாகும்.

செயல்முறை:

சில சமயங்களில், முக்கியமாக, ஒருவருடைய தவற்றினால் அனுசரிப்பு தேவைப்படும்போது, அனுசரிப்பது கடினமாக இருக்கக்கூடும். இவ்வாறு நடக்கும்போது, மாற்றத்தை கொண்டுவருவதற்காக, நான் நம்பிக்கை கொண்டிருப்பதே என்னுடைய பங்கு என்பதை நான் உணரவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எதிர்மறையான உணர்வுகளின்றி நான் அனுசரித்து என்னை மாற்றிக்கொள்ளும்போது, காரியங்கள் சிறப்பானதாக மாறிக்கொண்டிருப்பதை நான் காண்பேன்.

 

நன்றி –  பிரம்மகுமாரிகள் வித்யாலயம்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *