நற்சிந்தனை – பொறுப்பு

Advertisements

இன்றைய சிந்தனைக்கு

பொறுப்பு:

பொறுப்புடைய ஒருவரே திருப்தியுடையவராக இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய பொறுப்புக்களை உற்சாகத்துடன் நாம் ஏற்றுக்கொண்டு, கடமையுணர்ச்சியுடன் அவற்றை நிறைவேற்றும்போது, நம்முடைய காரியம் மிகவும் திறம்படவும் சிறப்பானதாகவும் ஆகின்றது. இது மனநிறைவு மற்றும் திருப்திக்கு வழிவகுக்கின்றது.

செயல்முறை:

நான் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும், ஏதாவது குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்ற நான் பொறுப்பேற்றுக்கொள்வது அவசியமாகும். அதில் என்னுடைய கவனத்தை நான் செலுத்தும்போது, என்னால் முடிந்தளவு சிறப்பானவற்றை கொடுக்க முடிகின்றதை நான் காண்பதோடு, எதை செய்துகொண்டிருந்தாலும் நான் திருப்தியடைவேன்.

 

You may also like...

Leave a Reply