நற்சிந்தனை – அகத்தாய்வு

Advertisements

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு:

அகத்தாய்வு என்னுடைய தூய்மையான, ஆதியான மற்றும் பூரணத்துவமான சுயத்துடன் தொடர்பு கொள்வதற்கு எனக்கு உதவுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அகத்தாய்வு என்றால் மௌனத்தில் நேரத்தை செலவழிப்பதாகும். இது நம்முடைய தூய்மையான, ஆதியான மற்றும் பூரணத்துவமான சுயத்துடன் தொடர்பில் இருப்பதற்கு நமக்கு உதவுகிறது. இது நம்முள் ஆழமாக சென்று நம்முடைய உள்ளார்ந்த உண்மையை அறிந்துகொள்ள உதவுகிறது. நம்மை அதிகமாக நாம் புரிந்துகொள்ளும்போது, உலகத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் நம்மால் மேன்மேலும் ஆக்கபூர்வமான வழியில் அணுக முடியும்.

செயல்முறை:

நான் நேரம் எடுத்துக்கொண்டு, என்னுடைய சொந்த உள்ளார்ந்த தகுதியை என்னுள் ஆழமாக பார்ப்பது அவசியமாகும். இப்பயிற்சியை நான் வளர்த்துக்கொள்ளும்போது, அது மிகவும் கடினமான நேரங்களிலும் எனக்கு உதவும். என்னுடைய சுய-மரியாதையை பேணிக்காக்க உதவுவதோடு, நான் இருக்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் நிலையாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கும் எனக்கு உதவி செய்யும்.

You may also like...

Leave a Reply