நற்சிந்தனை – தூய்மை
இன்றைய சிந்தனைக்கு
தூய்மை:
தூய்மையாக இருப்பவரே மற்றவர்களுடைய இதயத்தை வெற்றிகொள்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
தூய்மையாக இருப்பதென்பது எதிர்மறையான உணர்வுகள் அல்லது நோக்கங்கள் இல்லாமல் இருப்பதாகும். நாம் தூய்மையாக இருக்கும்போது, நாம் மற்றவர்களுக்காக நல்லாசிகளால் நிறைந்துள்ளோம். இது இயற்கையாகவே மற்றவர்களுடைய அன்பையும் ஆசிர்வாதத்தையும் ஈர்க்கின்றது.
செயல்முறை:
இன்று, என்னுடைய அனைத்து எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் நான் தூய்மையாக இருப்பதற்கு முயற்சி செய்வது அவசியமாகும். இந்த பயிற்சி என்னை எதிர்மறையானவற்றிலிருந்து விடுபட்டு இருக்க எனக்கு உதவி செய்கின்றது. நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்காகவும், அவர்கள் என்னிடம் நடந்து கொள்வதை கூட பொருட்படுத்தாமல் நான் நல்லாசிகளை கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும். நான் தூய்மையாக இருக்கும்போது என்னுடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களை நான் இயற்கையாகவே ஈர்க்கின்றேன்.