நற்சிந்தனை ….. சுய கட்டுப்பாடு

Advertisements

 

 

இன்றைய சிந்தனைக்கு

சுய கட்டுப்பாடு:

என்னுடைய செயல்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது என்பது என்னுடைய சொந்த தலைவிதியை உருவாக்கிக் கொள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

காரியங்கள் தவறாக போகும்போது பெரும்பாலும் சூழ்நிலையின் மீதோ அல்லது மற்றவர் மீதோ பழி செலுத்துகின்றோம். ஆனால் நம்முள் நாம் பார்த்து எதையாவது வித்தியாசமாக செய்துள்ளோமா என நாம் சோதித்து பார்ப்பது அவசியமாகும். நாம் தவறு செய்திருக்கும்போது அதை ஒத்துக்கொள்ள கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மையில் வெற்றியடைய இவ்வாறு கற்றுக்கொள்வதே ஒரே வழியாகும்.

செயல்முறை:

காரியங்கள் தவறாக போகும்போது சூழ்நிலையையும் மற்றவர்களையும் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, என்னுடைய கைகளில் சக்தி உள்ளது என புரிந்துகொள்வது அவசியமாகும். என்னிடம் நான் நேர்மையாக இருக்கும்போது, நான் கடந்தகால சூழ்நிலைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். காரியங்களை சரிசெய்வதற்கான சக்தி என்னிடம் இருக்கிறது. மேலும் என்னுடைய மனதில் சிந்திக்ககூடிய எதையும் சாதிக்கக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது.

 

You may also like...

Leave a Reply