போர்பஸ் ஊழலை மிஞ்சும் வானுர்தி ஊழல். பாஜக தப்புமா? ஆர்.கே.

Advertisements

1980 ஆம் ஆண்டு போர்பர்ஸ் பீரங்கி ஊழலுக்குப் பின், 1989 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  தோல்வியடைந்தது. அன்று அவ்வூழலில் காங்கிரஸ் தலைவர் இராஜிவ் காந்தி ஊழல் செய்து கமிஷன் பெற்றார் என்று எதிர்க்கட்சிகளால் பரப்புரை செய்யப்பட்டது. ஆதலால் காங்கிரசுக்கு பாரளுமன்றத்தில் முழு மெஜாரிட்டி கிடைக்காமல் போக ஐக்கிய ஜனதா தள அரசை ஆதரித்தது. சந்திரசேகர் பிரதமராக பதவியேற்றார்.

அதேபோன்ற குற்றச்சாட்டு தற்போது பாஜக அரசு மீது காங்கிரஸ் சுமத்தியுள்ளது. நாட்டின் விமான படைக்காக பிரான்சு அரசுடன் ரபேல் ரக விமானங்களை வாங்குவதற்கு  பாஜக அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வொப்ந்தப்படி  36 ரபேல் விமானங்கள் விமானம் ஒன்றுக்கு விலையாக 1600 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக இராணுவ அமைச்சர் பாராளுமன்றத்தில்   கொடுத்த விவரம் ஒரு விமானம் 600 கோடிக்கு வாங்குவதாக மட்டுமே. ஆனால் தற்போது ஒரு விமானம் 1600 கோடிக்கு வாங்குவதாக கூறியுள்ளனர். ஆகையால் காங்கிரஸ் இதில் பாஜக ஒரு விமானத்திற்கு 1000 கோடி விதமாக 1.32 கோடி மெகா ஊழலை செய்துள்ளது என்று போராட்டத்தில் குதித்துள்ளது.

முதலில் 126 விமானங்கள் வாங்குவதாக காங்கிரஸ்  அரசு இருக்கும் போது பேசப்பட்டது. தற்போது அது 36  விமானங்களாகவும் மீதி இந்தியாவில் அதை கட்டமைக்கப்பட வேண்டும்  என்பதாகவும் பேசப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுடனான கட்டமைப்பு பணிக்கு மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தை பெற போட்டியிட்டன, இதில் பிரான்சு நாட்டின் விமான உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டாக செயல்பட ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி குரூப்புக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விமான நிறுவனத்தில் எந்த முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ்க்கு எப்படி ஒப்பந்தம்கொடுக்ப்பட்டது என்பது அடுத்த குற்றச்சாட்டு. பிரான்சு அரசுடன் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசி வந்தார். அது சமயம் விலைவிவரங்கள் பேசப்பட்டு வந்ததே தவிர ஒப்பந்தம் நிறைவேறவில்லை.  அடுத்ததாக வந்த பாஜக ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.  இதில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகவும். இது 2ஜி ஊழலை மிஞ்சும் ஊழல் என்றும் ஆளும் கட்சி மீது குற்றம்சாட்டப்படுகிறது.

காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் வேண்டாத பழியை எங்கள் மீது போடுகிறது என்று பாஜக சொல்கிறது. நாங்கள் எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று மத்திய நிதி அமைச்சர். அருண் ஜெட்லி கூறியுள்ளார். எந்த ஊழலும் இல்லை நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிய பாஜக விமான ஊழலை எப்படி சந்திக்க போகிறது சமாளிக்கப்போகிறது. அது தேர்தல் நேரத்தில் எப்படி எதிரொலிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You may also like...

Leave a Reply