நற்சிந்தனை

Advertisements

அகத்தாய்வு:

தன்னுள் பார்க்க தெரிந்தவரே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுபிடிப்பவர் ஆவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பிரச்சனையை சந்திக்கும் பொழுதெல்லாம், சூழ்நிலைகள் மாறுவதற்கு ஏதாவது ஒன்று நடக்கும் என எதிர்பார்கின்றோம். ஒன்றுமே நடக்காத போது, மற்றவர்களிடமிருந்து ஆதரவு அல்லது வழிகாட்டுதலை எதிர்பார்கின்றோம். நாம் அரிதாகவே நம்முள் பார்ப்பதை பற்றி சிந்திக்கின்றோம். பெரும்பாலும் நமக்கு தேவையான தீர்வுகள் நமக்குள்ளே இருக்கின்றன; அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என நமக்கு தெரியவில்லை.

செயல்முறை:

ஏதாவது தவறாக நடக்கும்போது, நான் முதலில் என்னுடைய மனதை அமைதியாக வைத்திருந்து என்னுள் பார்ப்பது அவசியமாகும். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் என்னுள் இருக்கின்றன என நான் நம்பிக்கை கொண்டிருப்பது அவசியமாகும். நான் நேர்மறையாக இருக்கும்வரை, எனக்கு தேவையான பதில்களை நான் கண்டுபிடிப்பேன்.

You may also like...

Leave a Reply