சபரிமலை ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா – ஆர்.கே.

Advertisements

சென்ற வாரம் முதற்கொண்டு இந்தியா முழுமைக்கும் பரபரப்பை கிளப்பிய விஷயம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில்  ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் தொன்றுதொட்டு ஐயப்பனை காண பெண்கள் செல்வதில்லை அல்லது பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதாகும். இதை உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் குழு வழக்காக தாக்கல் செய்து, தங்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வாதிட்டனர். வாதத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் அவர்களுக்கு இருந்த தடை அகற்றி எப்பாலினரும் அங்கு செல்லாம் என்று ஐந்து பேர் கொண்டு நீதிபதிகள் அமர்வு தீர்வு தந்தது.

தீர்ப்புக்கு பின்னாலும் அமைதியாக இருந்த கேரளா மற்றும் கோவில் நிர்வாகம், திடிரென்று பெண்களை அனுமதிக்க முடியாது என்பதாக அறிக்கை விட்டு பிரச்னையை கிளப்பியதன் பின்னால்  பாஜக மற்றும் காங்கிரஸ் அரசியல் செய்கின்றது என்பது பட்டவர்த்தனமாக தெரிய  வந்துள்ளது.

நாங்கள் பக்தர்களின் மன உணர்வுகளை மதித்து எங்கள் ஆதரவை தருகிறோம் என்று இரு கட்சிகளும் சொன்னாலும். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதும் உண்மையாக உள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் நடப்பது இது முதல் முறையல்ல. அந்த அளவிற்குத்தான் நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் நிலை இந்தியாவில் உள்ளது. இதில் அரசியல் சாசன அமைப்பு அமைத்துள்ள நான்கு துண்களும் இற்று வருகின்றன என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.  சப்ரேஷன் ஆப் பவர் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதில் ஒருவர் அதிகாரத்தை மற்றவர் மதித்து நடக்கும் போக்கு நீர்த்து வருவது. இனி இந்தியாவில் ஜனநாயகம் தலைத்தோங்குமா? என்ற கேள்வி பிறந்துள்ளது.  நீங்கள் நீதிமன்றத்தில் போய் நீதி வாங்கி வந்தாலும், அதை மதிக்க ஆள் இல்லை. அப்படியென்றால் நீதிமன்றம் எதற்கு என்ற கேள்வி வரும்.  மதிக்க கூடியவர்கள் அதிகாரத்திற்கு வரும்வரை அதன் தீர்ப்புகள் பயனற்றவைகளாகத்தான் இருக்கும். காரணம் நீதிமன்றத்திற்கு நிறைவேற்றும் அதிகாரம் இருந்தாலும் உத்தரவிட மட்டுமே முடியும். அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரம் அரசு மற்றும் அரசியல்வாதிகள் கையில் உள்ளது. இதை தங்களின் முன்னுரிமையாக எடுத்துக் கொண்டு ஆட்டம் காண வைக்கிறார்கள். இதன் விளைவுகள் சர்வாதிகாரத்தை நோக்கிய பயணமாகத்தான் முடியும்.

இந்த சூழ்நிலையில்தான் மீண்டும் ரிவேயூ பெட்டிசன் போடுவோம் என்று சொல்லியுள்ளது கேரள தேவசம் போர்ட் என்ற ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் கோவில் நிர்வாகம். அரசு தங்கள் பொறுப்பை கைகழுவி தேவசம் போர்டு எடுக்கும் எந்த முடிவுக்கும் அரசு ஒத்துழைக்கும் என்று சொல்லியுள்ளது.

ஆக பெண்கள் கேரள ஐயப்பன் கோவிலுக்கு குறிப்பாக சபரிமலைக்குச்  செல்லும் நிலை நீடிக்குமா? அல்லது மறு ஆய்வு செய்யப்படுமா அல்லது எதாவது சமரசம் ஏற்படுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா.

You may also like...

Leave a Reply