வலிமை பெறுகிறதா காங்கிரஸ்?  –  ஆர்.கே.

Advertisements

பாராளுமன்ற தேர்தல் வரும் 2019 மே மாதத்துடன் முடிவடைவதால், அதற்கான தேர்தல் எந்நேரமும் நடக்கலாம், அறிவிப்புகள் வரலாம் என்ற நிலையில், கூட்டணி அணி சேர்க்கைகள், யாருக்கு எவ்வளவு பலம், எத்தனை சீட் ஷேர் என்று கணக்குகள் பொதுவெளியிலும், அரசியல் கட்சிகளிடமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரதான கட்சிகள் பாஜக. காங்கிரஸ். மற்றவை எல்லாம் பிராந்திய கட்சிகள் மட்டுமே. கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களா? இல்லையா என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பாவம் நாம் அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் யார் ஒரத்திலாவது சேர்ந்து கொள்வார்கள்.

அணி சேர்க்கை வியூகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் பலத்த போட்டியுள்ளது. இதில் பாஜகவைக் காட்டிலும்.  காங்கிரஸ் முந்தி செல்வதாகவே தெரிகிறது. காரணம் ராகுல் காந்தி வரப்போகிற 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிரச்சார பயணங்களை தீவிரமாக செய்து வரும் வேளையில், பாராளுமன்றத்திற்கான கூட்டணி கணக்குகளையும் போட்டு வருகிறார்.

அதற்கு முன்னோட்டமாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அணி சேர்க்கைக்கான எண்ணிக்கையை தொடங்கியுள்ளார்.  அவரைத் தொடர்ந்து அணியில் உள்ள திமுக. அதை உறுதிப்படுத்தும் விதமாக காங். ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.  இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸ்  அணி சேர்க்கை தீவிரப்படும்.

தமிழகத்தில் திமுக  காங். அணியில் இருந்து விலகும்  நான் காங்கிரசோடு சேருவேன் என்பதாக புதிதாக களம் காண வந்திருக்கும் கமல் கூறியுள்ளார்.  இதற்கிடையே மறைமுகமாக பாஜக திமுகவை அணுகி வருவதாகவும், வெளியில் எதிர்ப்பு காட்டி வரும் திமுக,  உள்ளடியாக பேசிய வருவதும். அரசியலில் சகஜமப்பா என்பதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இப்படியாக  பல  அரசியல் கணக்குகள் ஒடிக் கொண்டிருக்கின்றன.

பாஜக நிலைதான் பரிதாபமாக உள்ளது. சொன்ன சொல்லுக்கும், இன்று உள்ள நிலமைக்கும், அவர்களே  ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் நிலை உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்னதை எல்லாம் செய்ய முடியவில்லை தான், தேர்தலுக்காக சொன்னோம் என்கிறார். ஆக எதையும் செய்யாமல் வெற்று கோஷங்களும், வெற்று அறிவிப்புகளும், பொய்யாக கணக்குகளும், அரசாங்க மிரட்டலும் எனி ஒரு போதும் பாஜகவுக்கு கை கொடுக்காது என்பதை உணர்ந்த அவர்கள், இராமனே கதி என்று  இராமனிடம் சரண்டர் ஆகியுள்ளனர்.

ஆகக் கூடி அரசியல் களத்தில் இனி வெல்ல முடியாத நிலைதான் பாஜகவுக்கு உள்ளது. மத உணர்வுகளை துண்டிவிட்டு. மத அரசியல் செய்து அப்பாவி வடக்கு இந்தியர்கள் வாக்குகளை பெற துடிக்கிறது பாஜக. வேறு வழியில்லை அவர்களுக்கு. ஆக பாஜக தாய் சங்கம் ஆர்எஸ்எஸ் இப்போதே அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.  151 அடிக்கு இராமனுக்கு சிலை வைக்கப் போவதாகவும், அது சரயு நதிக்கரையில் அமையும் என்றும் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பைய்யாஜி தெரிவித்துள்ளார்.

நாங்கள் நீதிமன்றத்தை நம்பினோம். ஆனால் நீதிமன்றம் எங்களுக்கான தீர்ப்பை விரைந்து தர மறுக்கிறது. ஜல்லிக்கட்டு, சபரிமலைக்கு உடன் முடிவு செய்ய கூடிய நீதிமன்றம் இராமர் பிரச்னையில் முடிவு காணது நாளை கடத்துகிறது. அது கடத்தட்டும். கோயிலுக்கு முன்பாக சிலை நிறுமானிக்கப்படும், தேவைப்பட்டால் 1992 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதாவது இரத யாத்திரை திட்டமும்  உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆக பாஜக 2019 ல் இராமனை மட்டுமே நம்பியுள்ளது என்பது நன்றாக புலப்படுகிறது. அப்பாவி வடக்கு இந்தியர்கள் இராமனை நம்புவார்களா? இல்லை இராகுலை நம்புவார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்  டும். தெற்கு சொல்ல வேண்டியதில்லை. பாஜக எத்தனை கீழே செல்ல முடியுமோ செல்லலாம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஒருரிரு இடங்கள் பெறலாம். கர்நாடக கொஞ்சம் இடங்கள் தேறலாம், ஆந்திராவும் அதே நிலை இப்படியாக தெற்கே ஒன்னும் தேறாது என்ற நிலைதான் உள்ளது.

ஆக நம்பிக்கை காங்கிரஸ் பக்கமும், அரிதாக பாஜக பக்கமுமே உள்ளது இன்றய பாராளுமன்ற தேர்தல் நிலை.

You may also like...

Leave a Reply