விஜய் அரசியலுக்கு வருகிறாரா?  –  ஆர்.கே.

 

தமிழக அரசியலில் எப்போதும் உள்ள டிரெண்ட்,  முன்னனி  நடிகர்  அரசியலுக்கு வருகிறார் என்பதுதான்.  இது தமிழகத்தை பிடித்த சாபம் என்று தான்  சொல்ல முடியும். காரணம் திரையில் காட்டும் விஷயங்களை ஒரு மனிதன் நிஜத்திலும் செய்வான் என்று நினைக்கும் கற்பனை மனோபாவம் கொண்ட சமூக கூட்டமாக தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.

நாம் பொத்தாம் பொதுவாக எல்லோரும் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இதற்கு பின் உள்ள அரசியல் என்பது. நடிகர் வருகிறானே இல்லையோ, நான் அவன் வாலை பிடித்துக் கொண்டு அரசியலுக்கு வருவேன். ஏன் என்றால் என் முட்டாள் தனத்துக்கு நடிகன் தான் சரியான ஆள் என்ற நினைப்பு தமிழகத்தின்  ஒரு   குறிப்பிட்ட பகுதியினர்களிடம், ஏழை, எளிய, சமூகத்தில் பின் தங்கியவர்களிடம் இருப்பதுதான்.

நடிகர்களை கொண்டாடுவதன் நோக்கம். தன் அரசியல் கனவுகள் அவனால் நிறைவேற்ற படும் என்று சாமனியன் நம்புவதால். ஏன் என்றால் யதார்த்த அரசியல் அவனுக்கு தெரியவில்லை அல்லது இச்சமூகம் அவ்வாறு பயிற்றுவிக்கப்படவில்லை என்பதுதான்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்கையில், அதன் அடிப்படையில் தன்னை அரசியல் களத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும் சதவீதத்தினரை  ஒப்பிடுகையில் இவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இப்படியாகத்தான் இரு பெரும் தலைவர்கள் மறைவிற்குப் பிறகு அதாவது கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தை தலைமை தாங்க பல்வேறு முனைகளில் இருந்து பல போட்டிகள். இதில் நடிகர்களும் அடக்கம்.

புதிதாக களம் காண வருவாரோ என்று நாள்தோறும் விஜய் குறித்து விமர்சனங்கள். ரஜினி குறித்த விமர்சனங்கள் முடிந்து இப்போது விஜயிடம் வந்து நிற்கின்றன ஊடகங்கள்.  இதற்கு காரணம் அவரின் சமீபத்திய படமான சர்காரில் ஆளும் தரப்பை கடுமையாக சாடியுள்ளதால். விஜய் நடித்த அந்த அரசியல் படத்தில் தங்களுக்கு ஆட்சேபமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை செய்து, விஜய் பட பேனர்களை கிழித்து படத்தை ஒடவிடாமல் தடுத்தனர்.  அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய முதல்வர் தொண்டர்கள் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்.

இப்படியாக கருத்துச் சுதந்திரத்திற்கு அடி கொடுக்கப்பட்ட நாளாக இருந்தது  அதிமுக தொண்டர்கள் அடிதடியில் இறங்கிய நாள். கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதை விட்டு வன்முறையில் இருங்குவது தான் அதிமுக கலாச்சாரமாக உள்ளது. இவர்களை மட்டும் சொல்லி குற்றமில்லை. திராவிட கட்சிகளின் பாரம்பரியமே அப்படித்தான் உள்ளது. இதேபோல் முதல்வன் படத்தின் வெளியீட்டின் போது திமுகவின் நெருக்கடிகளை அப்படம்  சந்தித்தது.

யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். வருவர்கள் தங்களை ஒரு உண்மையான அரசியல்வாதிக்கான தகுதியோடு வந்தால் எல்லோரும் வரவேற்பார்கள் என்பதுதான் உண்மை.

விஜய்யும் அப்படி வரட்டுமே.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *