நற்சிந்தனை – பொறுப்பு

Advertisements

 

 

இன்றைய சிந்தனைக்கு

 

பொறுப்பு:

பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது சவாலை ஏற்றுக்கொள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளில், நமக்கு தேர்வு செய்வதற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன – ஒன்று, அவற்றை துணிவுடன் சந்தித்து,நம்முடைய வாழ்க்கை மற்றும் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய  தேர்வுகள் ஆகியவற்றின் பொறுப்பை ஏற்பது. இரண்டாவது, தப்பிக்க முயற்சி செய்வது.இரண்டாவது தேர்வானது, வெளிஉலகை சார்ந்த வெற்றி அல்லது உள்ளார்ந்த திருப்தியை கொண்டுவருவதில்லை.

செயல்முறை:

உள்ளார்ந்த திருப்தியானது சவால்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வதை விட அதை ஏற்றுக்கொள்வதில் உள்ளது. வாழ்க்கை என்னும் விளையாட்டில்,பார்வையாளராக இருப்பதற்கு பதிலாக, களத்தில் இருப்பது அவசியம். எந்தளவு அதிகமாக நான் விளையாடுகின்றேனோ, அந்தளவிற்கு நான் நிபுணத்துவம் அடைகின்றேன். நான் மனதில் நிலைநிறுத்தும் இந்த எண்ணம், வாழ்க்கை கொண்டுவரும் சவாலான சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

 

You may also like...

Leave a Reply