நற்சிந்னை – தன்னலமற்ற தன்மை

இன்றைய சிந்தனைக்கு

தன்னலமற்றதன்மை:

தன்னலமற்றதன்மை சந்தோஷத்தை தருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுயநலம் என்பது எப்பொழுதும் ஒரு ஆசையுடன் இணைந்தே உள்ளது. இந்த ஆசையினால் ஒருபொழுதும் திருப்தி இருக்கமுடியாது. நமக்கு எப்போதும் ஏதோ ஒன்று அதிகமாக வேண்டும். தன்னுடைய சொந்த ஆசைகளை வெற்றிக்கொள்ள முடியாதவரால் ஒருபொழுதும் கொடுப்பவர் ஆகமுடியாது. மற்றவர்களின் நன்மைக்காக வளங்களை பகிர்ந்துக்கொள்ளும் தன்மை நமக்கு இல்லை என்றால் நம்மால் சந்தோஷமாக இருக்கமுடியாது.

செயல்முறை:

நான் தன்னலமற்று இருக்கும்போது என்னுடைய திறமைகளின் மீது எனக்கு மரியாதை இருக்கின்றது. மேலும் அவற்றை மற்றவர்களின் நன்மைக்காக என்னால் பயன்படுத்தமுடிகின்றது. என்னுடைய திறமைகளை பயன்படுத்துவதால் எனக்கு திருப்தி இருக்கின்றது. அதனால் மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என்று எனக்கு எதிர்பார்ப்பு இல்லை. எடுத்துக்கொள்பவராக இருப்பதற்கு மாறாக கொடுப்பவராக ஆகின்றேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் மற்றவர்களிடருந்து நல்லாசிகளையும் பெற்றுத்தருகிறது.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *