பரபரப்பாகும் தேர்தல் களம் 2019? களை கட்டும் கூட்டணி சேர்க்கைகள்  –  ஆர்.கே.

2019  ஆம்  ஆண்டு   17 வது லோக்சபா தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. விரைவில் மார்ச் முதல்வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் களம் காண இருக்கின்றனர்.

அதற்கான ஏற்பாடுகளாக அணி சேரும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மிக மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.  தேசிய ஜனநாயக கூட்டணி,  இதில் இந்திய அளவில் சிறிய கட்சி மற்றும் பெரிய கட்சி மற்றும் உதிரிக் கட்சி என்று பாஜக தலைமையில் 42 கட்சிகளைக் கொண்ட மெகாக் கூட்டணியாக இருக்கின்றது. இதில் சில சேர்வதும், விலகுவதும் இயல்பாக நடக்க கூடியது.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  22  கட்சிகள்  அங்கம் வகிக்கின்றன.  இதிலும் சில விலகுவதும், சில சேர்வதும் இயல்பாக நடந்து வருவதே.

இப்படியாக இரு பெரும் கூட்டணிகள் இந்த தேர்தலை சந்திக்க உள்ளன. இது தவிர மாநில அளவில் செல்வாக்கு பெற்ற கட்சிகளும் களத்தில் உள்ளன.  90 கோடி மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக யார் என்று இன்னும் முடிவாகத நிலை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில்  பிரதமர்  நரேந்திர  தாமேதர்  மோடி தலைமையிலேயே தொடர்ந்து களம் காண இருக்கிறது.

ஆளும் தரப்புற்கும், எதிர் தரப்பிற்கும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன.  இரு பக்கமும் கூட்டணி சேர்க்கைகள், தொகுதி ஒதுக்கீடுகளின்  விஷயங்கள் போய் கொண்டிருக்கின்றன.

பாஜக தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாமாவுடன் இணைந்து களம் காண உள்ளது. திமுக தலைமையில்  காங்கிரஸ்  இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடந்து மற்ற கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது.

விரைவில் கூட்டணிகள் இரு தரப்பிலும் இறுதி உறுதி செய்யப்பட்டு,  இடங்கள் யாருக்கு எங்கு என்று அறிவிக்கப்படும். அதன் பிறகான பிரச்சாரத்தில் யார் எதை எடுத்துச் சொல்லப் போகின்றனர். சாதக பாதகங்கள், சாதனை, சோதனை என காரசார விவதாங்கள் மக்களை சென்று அடையும்.

பணம் விளையாடும் தேர்தலாக இருக்குமா? அல்லது தேர்தல் நடைமுறைகள் நேர்மையாக இருக்குமா? என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. எது எப்படியோ தேர்தல் நடைமுறைகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் முறைகேடுகள் மலைபோல் குவிந்த வண்ணம் உள்ளன. விகிதாச்சார தேர்தல் நடைமுறை வர வேண்டும்.

100 சதவீதம் வாக்களார்களில் வாக்களிக்கும் வாக்களர்களில் 40 சதவீதம் ஓட்டு வாங்குபவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சி அமைக்கிறார். ஒட்டு எண்ணியிக்கையில் மொத்த வாக்குகள் அடிப்படையில் பார்த்தால் 60 சதவீதம் எதிராக வாக்கு அளிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் குறைந்த வாக்கு சதவீதம் வாங்கியவரே முதல்வராகவே, பிரதமராகவோ பதவி ஏற்கிறார். ஆகையால் விகிதாசார ஓட்டு நடைமுறையை எல்லோரும் வலியுறுத்தி வருகின்றனர்.மின்னணு வாக்குப்பதிவிலும் சந்தேகம் எழுந்துள்ளது. அது மாற்றப்படுமா? இல்லையா என்பதும் இத்தேர்தலில் தெரியவரும்.

ஆக விரைவில் களம் காண இருக்கும் 2019 தேர்தலுக்கு நாம் வாழ்த்துகளை சொல்லி மக்கள் ஒரு புத்திசாலி முடிவை தருவார்கள் என்று நம்புவோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *