வறட்சியில் மிதக்கும் தமிழகம் தீர்வு என்ன? – ஆர்.கே.

Advertisements

2020 –ல் இந்தியா தண்ணீருக்கு திண்டாடப்போவதாக சொல்லியது வேறு யாரும் அல்ல நமது நாட்டின் நிதி அயோக் என்கின்ற,  நாட்டின் திட்டங்களை வடிவைமைக்கும் திட்டக் கமிஷனாகும்.

அதற்கு முன்னோட்டமாக 2019-லேயே தமிழ்நாடு வறட்சியில் மிதக்கிறது. வெள்ளத்தில் 2016 ல் மிதந்த தமிழ்நாடு, 2019 ல் வறட்சியில் மிதக்கிறது. உலகளாவிய பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்தியா மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய தானே புயல், வார்தா புயல்,  கஜா புயல் என்று தொடர்ந்து தமிழகம் புயல்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வருவது நிதர்சனம். இதற்கான கட்டமைப்பு, முன்னேற்பாடுகளை அரசுகள் எப்போதும் தாமதமாகவே செய்து வருகின்றன. வரும் முன் காப்போம் என்கின்ற செயல்பாடு அரசுகளிடம் இல்லை.

தொடர்ச்சியாக இப்போது நீரின்றி திண்டாடுகிறது தமிழகம், விவசாயம் செய்ய தண்ணீரின்றி தவித்த தமிழகம், இப்போது குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கிறது. இந்நிலைக்கு காரணம் என்ன என்பதை யாரும் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகளில் அரசுகளை முடிக்கவிட வேண்டிய வேலைகளை செய்யாமல், ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லும் செயல்களை நடந்து வருகிறது.

மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து போய் வெகுநாட்கள் ஆகிவிட்டது. இப்போது இருக்கும் வரை வாழுவோம் என்பது போய், பேசாமல் எல்லோரும் போய் சேரலாம் என்கின்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏன் என்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்பான அரசியல்வாதிகள் காணக்கிடக்கவில்லை. ஜனநாயகம் முற்று முதலாக தோல்வியை சந்தித்துள்ளது.

எந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும், மக்களின் தேவைகளை முன் கூட்டி உணர்ந்து, மக்களை அதில் இருந்து காப்பது கிடையாது. மக்களை திண்டாட்டத்தில் விடுவது கண்டு, மக்கள் இனி யாரும் நம்மை காக்க வரப்போவதில்லை. வாழ்ந்தது போதும் என்கின்ற நிலைக்கு செல்கின்றனர். இது ஒட்டு மொத்த அரசியல் கட்டமைக்கும் பேராபத்தை விளைவிக்க போகும் நிலையாகும்.

ஆயிரத்தெட்டு வழிகளை நிபுணர்கள் சொல்கின்றனர். பொறுப்பாக நிறைவேற்ற அரசியல் அமைப்பு இந்தியாவில் இல்லை. இது ஒரு ஏமாற்று அரசாங்க அமைப்பாக உள்ளது. உதாரணத்திற்கு வறட்சி என்று ஒன்றும் இல்லை என்று தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கூறுகிறார். மழை பொழியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்கிறார் முதலமைச்சர். இவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? யோசித்துக் கொள்ளுங்கள் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

You may also like...

Leave a Reply