ஒரு நாடு ஒரு கார்டு – ஆர்.கே.

Advertisements

பாரத பிரதமராக தாமேதர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, ஒரு நாடு, ஒரு மொழி கொள்கையின் தொடர்ச்சியாக  நாடு முழுக்க ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தவற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது.  ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் படி தங்கள் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கும் என்றாலும், இந்தியாவின் உண்மை நிலைமையான வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற திட்டத்தின் படியே கடந்த 70 ஆண்டுகளாக பாரதமாதா நடைபயின்று வந்துள்ளாள்.

இப்போது நடையை மாத்து என்று நாட்டின் தலையெழுத்தை மாற்ற முற்படுவது சற்று யோசித்து செய்ய வேண்டிய விடயமாகும். இன்னும் சொல்லப் போனால், வேண்டாத வம்பை விலைக்கு வாங்குவதாகத்தான் இருக்கும்.

பல்வேறு கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கம் கொண்ட  ஒரு  ஜனநாயக  நாட்டை, சர்வாதிகாரப் போக்கோடு ஒன்றுபடுத்த நினைப்பது நிர்வாக மற்றும் மத ரீதியான பலத்தை பெறுக்குவதற்காக பாஜக நினைக்கலாமே தவிர, உண்மையில்  அதை பிரதேஷ மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை.

குறிப்பாக தென்பகுதி மக்களின் பழக்க வழக்கம் முற்றிலுமாக வடமாநில மக்களின் பழக்க வழக்கத்தில் இருந்து மாறுபட்டது. பாஜக தற்போது ஒரு  ரேஷன்  கார்ட் திட்டத்தை அடுத்த ஆண்டுக்குள் எல்லா மாநிலங்களும் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் இராமவிலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார். இது பல மாநிலங்களிலும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதில் பயனர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானலும், எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது சௌகரியமாக பார்க்கப்பட்டாலும், எப்படிப்பட்ட பொருட்கள் வழங்கப்படும், அந்ததந்த மாநில உணவு பழக்க வழக்கத்திற்கு உட்பட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுமா? இல்லையா? என்பது போன்ற தெளிவாக விளக்கம் இல்லை.

ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்ற பேசி வரும் பாஜகவின் ஒவ்வொரு நகர்வும்  தங்களின் சிந்தாந்தம் நோக்கியதாகத்தான் இருக்கும் என்றால், மக்களும் அதை எதிர்க்கும் மனோபாவத்தில் இருந்து பின்வாங்க மாட்டார்கள் என்பதும் திண்ணம். இது தேவையில்லாமல் நாடு முழுக்க ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும், வளர்ச்சியை பாதிக்கும் விஷயமாக கூட மாறக்  கூடும்.

ஆக பாஜக தன் சித்தாந்ததை வலிந்து திணிக்காமல், தன் ஆதரவாளர்களோடு நிறுத்திக் கொண்டால் நாடு அமைதியாக இருக்கும். dD�Oq���

You may also like...

Leave a Reply